இன்னும் ரெண்டு நாளில் எல்லாமே மாற போகுது! உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்த கார் வாடிக்கையாளர்கள்!

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ரொனல்ட் திகழ்ந்து கொண்டுள்ளது. ஆனால் கூடிய விரைவில், இந்திய சந்தையில் ரெனால்ட் கார்களின் விலை உயரவுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் தனது கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு, வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 3 கார்களை விற்பனை செய்து வருகிறது.

Renault Kwid

அவை ரெனால்ட் க்விட் (Renault Kwid), ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) ஆகியவை ஆகும். இதில், ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் 4.30 லட்ச ரூபாயாக உள்ளது.

மறுபக்கம் ரெனால்ட் ட்ரைபர் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களின் ஆரம்ப நிலை வேரியண்ட்களின் விலை தலா 5.76 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Renault Kwid Side View

ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதுடன் மட்டுமல்லாது, வரும் குடியரசு தினத்தில் (Republic Day), அதாவது வரும் ஜனவரி 26ம் தேதி, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை பொது பார்வைக்கும் கொண்டு வரவுள்ளது. ரெனால்ட் டஸ்டர் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த ஒரு கார் ஆகும்.

ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. அந்த கார் தற்போது புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. இது ரெனால்ட் டஸ்டர் காரின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் முதலில் புதிய தலைமுறை டஸ்டர் காரின் 5 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதன் பின்னர் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷனையும் ரெனால்ட் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் புதிய தலைமுறை டஸ்டர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த பின்னர், அதன் உடன் கூட்டணியில் இருந்து வரும் நிஸான் நிறுவனம், புதிய தலைமுறை டஸ்டர் காரின் அடிப்படையில், நிஸான் டெக்டான் (Nissan Tekton) என்ற காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கார்களின் விலையை உயர்த்துவதை கார் நிறுவனங்கள் வழக்கமாக வைத்துள்ளன. இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதில், ரெனால்ட் நிறுவனமும் ஒன்றாகும். எனவே புத்தாண்டில் புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், சற்று அதிக தொகையை செலவு செய்ய தயாராகி கொள்வது சிறந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, December 29, 2025, 23:52 [IST]
English summary
Renault price hike january 1 2026 check all details here
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+