மாருதிக்கு இப்பவே நடுக்கம் எடுத்திருக்கும்! அந்த கார் மறுபடியும் வருதா! மார்க்கெட்டை தலகீழா புரட்டி போட போகுது

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் (Renault), இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), இந்தியா டுடே தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், ரெனால்ட் இந்தியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3,662 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 2,811 கார்களை மட்டுமே ரெனால்ட் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

2025 Renault Duster Interior Design

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 851 கார்களை ரெனால்ட் இந்தியா நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இதன் மூலமாக விற்பனையில் 30.27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ரெனால்ட் இந்தியா நிறுவனம் அசத்தியுள்ளது.

ரெனால்ட் இந்தியா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 3 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அவை ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) ஆகியவை ஆகும்.

Renault Kiger Facelift

இதில், 2,064 ட்ரைபர் கார்களை, ரெனால்ட் இந்தியா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 1,486 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 578 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 38.9 சதவீத வளர்ச்சி ஆகும்.

அதே நேரத்தில் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,151 ரெனால்ட் கைகர் கார்களையும் ரெனால்ட் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 779 ரெனால்ட் கைகர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 372 ரெனால்ட் கைகர் கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 47.75 சதவீத வளர்ச்சி ஆகும்.

மறுபக்கம் ரெனால்ட் இந்தியா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 447 க்விட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 546 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 99 ரெனால்ட் க்விட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் ரெனால்ட் கைகர் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் கார்களின் ஆரம்ப விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ரெனால்ட் நிறுவனத்தின் கார்கள் மிகவும் ஏற்றவையாக இருக்கும். குறிப்பாக இதில் ரெனால்ட் ட்ரைபர் காரானது, 7 சீட்டர் ஆகும். இந்தியாவில் தற்போதைய நிலையில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் 7 சீட்டர் கார்களில் ஒன்றாக ரெனால்ட் ட்ரைபர் திகழ்கிறது.

ரெனால்ட் நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், கூடிய விரைவில், டஸ்டர் காரை ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) விற்பனைக்கு வந்த பின்னர், ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் அடுத்த ஆண்டு (2026) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வருகை, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி விக்டோரிஸ், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, December 7, 2025, 18:32 [IST]
English summary
Renault sales report november 2025 30 27 per cent growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+