இந்த 7 சீட்டர் காரை லோன் போடாமயே வாங்கலாம்! விலை அவ்ளோ கம்மி! மாருதிக்கு இந்நேரம் ஒதறல் எடுத்திருக்கும்!
இந்திய சந்தையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான எம்பிவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு (MPV Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் ஆகிய கார்களை விட மிகவும் குறைவான விலையில் ஒரு எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என்றால், ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) உங்களுக்கு மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.60 லட்ச ரூபாய் மட்டுமே. இவை அனைத்தும் ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
விலை குறைவானது என்பதாலும், அப்டேட் செய்யப்பட்ட புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாலும், ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை உயர தொடங்கியுள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டின் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் முறையே 1,401, 1,411 மற்றும் 1,421 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின் வந்த ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,987 ஆக உயர்ந்தது. அந்த மாதத்தில்தான் ரெனால்ட் ட்ரைபர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கிடையே அதன் பின் வந்த ஆகஸ்ட் மாதத்தில் 1,870 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டன.
இது சிறிய சரிவுதான் என்றாலும் கூட, சிறப்பான ஒரு விற்பனை எண்ணிக்கைதான். ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) இன்னும் வெளியாகவில்லை. இது வெளியாகும்போது, ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை உயர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து கார்கள் மீதான ஜிஎஸ்டி (GST) குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்களின் விலைகள் குறைந்துள்ளன. ஜிஎஸ்டி குறைப்பால் விலை குறைந்துள்ள கார்களில் ரெனால்ட் ட்ரைபரும் ஒன்றாகும். முதலில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வேரியண்ட்டின் விலை 6.29 லட்ச ரூபாயாக இருந்தது.
அது தற்போது 5.76 லட்ச ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை முன்பு 9.16 லட்ச ரூபாயாக இருந்தது. அது தற்போது 8.60 லட்ச ரூபாயாக குறைந்துள்ளது. எனவே நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டுமல்லாது, அக்டோபர் உள்பட எதிர்வரும் பல்வேறு மாதங்களிலும், ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை 11.08 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலையோ வெறும் 5.76 லட்ச ரூபாய் மட்டுமே. எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் ட்ரைபர் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை எண்கள், வி3 கார்ஸ் தளத்தில் இருந்து பெறப்பட்டவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








