அடி மாட்டு விலையில் களமிறங்கும் புதிய 7 சீட்டர் கார்! வர்ற 23ம் தேதி ஒட்டுமொத்த மார்க்கெட்டும் அதிர போகுது!

இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. பொதுவாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு முன்னதாக, கார் நிறுவனங்கள் பல்வேறு புத்தம் புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வது வழக்கம். அத்துடன் ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களின் அப்டேட் செய்யப்பட்ட மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

எனவே இனி பல்வேறு புதிய கார்களின் அறிமுக நிகழ்ச்சிகளை நாம் தொடர்ச்சியாக எதிர்பார்க்கலாம். இதன்படி விற்பனைக்கு வரவுள்ள ஒரு சில கார்கள், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதில், ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் (Renault Triber Facelift) மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

Renault Triber Seats

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் ஒன்றுதான் ரெனால்ட் ட்ரைபர். இது மிகவும் விலை குறைவானது என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. இந்த காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்தான் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதன் அறிமுக தேதி (Launch Date) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் ஜூலை 23ம் தேதி (July 23) விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Renault Triber

இது குறித்து கார் அண்டு பைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் ஏராளமான டிசைன் (Design) அப்டேட்களை பெறவுள்ளது. இந்த புதிய மாடலில், புதிய க்ரில் அமைப்பு, ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் முன் பகுதியில் புதிய பம்பர் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.

இவை எல்லாம் தவிர, வட்ட வடிவ பனி விளக்குகள், புதிய டெயில்லேம்ப் க்ளஸ்ட்டர்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகிய அம்சங்களும், ரெனால்ட் ட்ரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஏராளமான வசதிகளையும் (Features) ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் கொண்டிருக்கும்.

இதில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பிஎம் 2.5 ஃபில்டர் போன்றவை எல்லாம், ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிகவும் முக்கியமான வசதிகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இன்ஜின் ஆப்ஷனில் (Engine Option) எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அது 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

முன்னதாக ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இது உறுதியாக தெரியவில்லை. எனவே இது நடக்குமா? என்பதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் ட்ரைபர் கார் இந்திய சந்தையில், கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து பார்த்தால், தற்போதுதான் ரெனால்ட் ட்ரைபர் கார் மிகப்பெரிய அளவிலான அப்டேட்களை பெற்றுள்ளது. இடைப்பட்ட சுமார் 6 ஆண்டு காலத்தில், ரெனால்ட் ட்ரைபர் கார் பெரிதாக அப்டேட் செய்யப்படவில்லை.

எனவே விரைவில் களமிறங்கவுள்ள ஃபேஸ்லிஃப்ட் மாடல், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை சுமாராக வெறும் 6.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை சுமாராக 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 8, 2025, 13:04 [IST]
English summary
Renault triber facelift launch date july 23 expected price and features
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+