குடும்பத்தோட போகலாம், குறைந்த விலை, ஏகப்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வரப்போகுது ரெனால்ட் டிரைபர்!
ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்கெட்டில் நீண்ட நாட்களாக ஒரு நல்ல கம்பேக்கிற்காக காத்திருக்கும் நிலையில் தற்போது தனது டிரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டு கம்பேக் தர ரெடியாகிவிட்டது. அதன் படி ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் காரை எப்பொழுது வெளியிடப்போகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக சிறப்பாக இந்தியாவில் விற்பனையை செய்யவில்லை இந்நிறுவனத்திடம் போதுமான கார்கள் இல்லை. இந்நிறுவனம் க்விட், டிரைபர் மற்றும் கைகர் ஆகிய கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

விற்பனையில் பெரிய அளவில் இந்நிறுவனம் ஜொலிக்கவில்லை என்றாலும், தற்போது தனது டிரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட அந்நிறுவனம் தயாராக்கி வருகிறது. இந்த காரை அந்நிறுவனம் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இந்த கார் வரும் 23ம் தேதி விற்பனைக்க வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எம்பிவி கார் கடந்த 2019ம் ஆண்டு தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் ரூ6.14 லட்சம் என்ற விலையில் இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியளு்ளது. இந்த கார் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் வெளியாகும் போது அதை விலை சுற்று அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டிரைபர் கார் மார்டன் லுக் மற்றும் டிசைனில் மாற்றப்பட்டுள்ளது. முன்பக்க கிரில் டிசைன் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பம்பர் பகுதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஃபாக் லைட் கீழ் பகுதிகளில் பழங்கப்பட்டுள்ளது. ஹெட்லைட் வடிவத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த காரின் அலாய் வீல்களும் வித்தியாசமான வடிவமைப்பில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள டிரைபர் காரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. புதிய காரில் ஏகப்பட்ட அம்சங்கள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால் தற்போது உள்ள மாடலில் உள்ளதே அதே இன்ஜின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனிலும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இந்த இன்ஜின் உடன் கூடுதலாக 1.0 டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்பக்படுகிறது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் புதிய அம்சங்களுடன் டிரைபர் கார் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் அதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









