ஒரு கிமீ-க்கு 44 பைசாதான் செலவு! அடி மாட்டு விலையில் 7 சீட்டர் கார்! மாருதி ஷோரூம்லாம் இனி காத்து வாங்க போகுது

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இருப்பினும் தற்போதைய நிலையில் ஒரு மாதத்திற்கு சுமார் 1,500 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனையாகி வருகின்றன. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை உயர்த்த ரெனால்ட் நிறுவனம் விரும்புகிறது.

இதன் ஒரு பகுதியாக ட்ரைபர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை ரெனால்ட் நிறுவனம் உருவாக்கி வந்தது. இந்திய சாலைகளில் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் (2025 Renault Triber Facelift), நாளை (ஜூலை 23) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Renault Triber Seats

இதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புத்தம் புதிய டீசர் வீடியோ (Teaser Video) ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரெனால்ட் இந்தியா (Renault India) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் (YouTube) சேனலில் இந்த டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த டீசர் வீடியோவில், 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன் மற்றும் பின் பகுதிகள், ஓரளவிற்கு காட்டப்பட்டுள்ளது. பின் பகுதி டெயில்கேட்டில் ட்ரைபர் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளதை இந்த வீடியோவில் காணலாம். தற்போது விற்பனையில் உள்ள மாடல் உடன் ஒப்பிடும்போது, இதன் ஃபாண்ட் மற்றும் எழுத்துக்களின் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கிறது.

Renault Triber Top View

அத்துடன் ரீ-டிசைன் செய்யப்பட்ட பின் பகுதி பம்பர் மற்றும் அதன் உடன் ஒருங்கிணைந்த பார்க்கிங் சென்சார்களையும் நாம் காணலாம். இதுதவிர 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன் பக்க க்ரில் அமைப்பையும் இந்த வீடியோவில் நாம் காணலாம். தற்போது விற்பனையில் உள்ள மாடல் உடன் ஒப்பிடும்போது, இது வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ரெனால்ட் நிறுவனத்தின் புதிய லோகோவும் (New Logo) வழங்கப்பட்டுள்ளது. எனவே 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புற டிசைனில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை, இந்த டீசர் வீடியோவின் மூலமாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் வசதிகளிலும் (Features) ஒரு சில மாற்றங்கள் மற்றும் அப்டேட்களை நாம் எதிர்பார்க்கலாம்.

இதன்படி தற்போது விற்பனையில் உள்ள மாடல் உடன் ஒப்பிடும்போது, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் கூட அப்டேட் செய்யப்படலாம். இதுதவிர 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளையும் நாம் எதிர்பார்க்க முடியும்.

ஆனால் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் காரில், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 72 பிஹெச்பி மற்றும் 96 என்எம் ஆகும்.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெனால்ட் ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் அது தற்போதைக்கு நடக்காது என்றே கூறப்படுகிறது. அதாவது ரெனால்ட் ட்ரைபர் காரில் தற்போதைக்கு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ரெனால்ட் ட்ரைபர் கார் தற்போதைய நிலையில் 6.15 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.98 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று உயர்த்தப்படலாம். எனினும் தொடர்ந்து இந்தியாவின் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் ஒன்றாகவே ரெனால்ட் ட்ரைபர் இருக்கும்.

அனேகமாக 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 6.25 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது நமக்கு நாளை தெரிந்து விடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அப்டேட் செய்யப்பட்ட 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற மற்ற 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ரெனால்ட் ட்ரைபர் கார் விலை குறைவானது என்பதுடன், அதை பராமரிப்பதும் மிகவும் எளிமையான ஒரு விஷயம்தான். ட்ரைபர் காருக்கான பராமரிப்பு செலவு (Maintenance Cost) ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 44 பைசா மட்டுமே என்று ரெனால்ட் நிறுவனம் கூறியுள்ளது. எனவே விலையும் குறைவாக இருக்க வேண்டும் எனவும், அத்துடன் பராமரிப்பு செலவும் குறைவாக இருக்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் ட்ரைபர் மிகச்சிறந்த ஆப்ஷன்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 22, 2025, 14:07 [IST]
English summary
Renault triber facelift launch tomorrow new teaser video out
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+