மாருதி சோலி முடின்ச்! அடிமாட்டு விலையில் புதிய 7 சீட்டர் கார்! எவ்ளோனு தெரிஞ்சா கையோட புக்கிங் பண்ணீருவீங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இன்று (ஜூலை 23) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல், சற்று நேரத்திற்கு முன்பு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் பார்க்கலாம்.

Renault Triber

2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஃபாலோ மீ ஹோம் வசதியுடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வசதிகளுக்கு (Features) பஞ்சம் இல்லை. அத்துடன் 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) கொண்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 21 வகையான பாதுகாப்பு வசதிகள், ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகின்றன.

Renault Triber MPV

இதில், 6 ஏர்பேக்குகள் வசதி மிகவும் முக்கியமான ஒன்றாகும். 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலு; ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும். அத்துடன் முன் பகுதியில் பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு வசதிகளையும், 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டுள்ளது.

2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனை (Design) பொறுத்தவரையில், எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் அட்வான்ஸ்டு எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி பனி விளக்குகள், புதிய க்ரில் அமைப்பு மற்றும் ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்பர் போன்ற அம்சங்கள் எல்லாம் கவனம் ஈர்க்கின்றன.

அத்துடன் 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்கள் (Colour Options) புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை அம்பர் டெரகோட்டா, ஷேடோ க்ரே மற்றும் ஜன்ஸ்கர் ப்ளூ ஆகியவை ஆகும். தற்போது விற்பனையில் உள்ள மாடல் உடன் ஒப்பிடும்போது, புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 35க்கும் மேற்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

டிசைன் மற்றும் வசதிகள் போன்ற அம்சங்களில் எல்லாம் இந்த அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, 'ஃப்ரெஷ்' ஆக மாற்றியுள்ளன. ஆனால் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் (Engine, Gear Box Options) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்தான், 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 6,250 ஆர்பிஎம்மில் 72 பிஎஸ் பவர் ஆகவும், 3,500 ஆர்பிஎம்மில் 96 என்எம் டார்க் திறன் ஆகவும் உள்ளது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 6.29 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9.16 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ரெனால்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ரெனால்ட் நிறுவனம் 2025 ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு மிகவும் சரியான விலை நிர்ணயத்தை மேற்கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகையால், இனி இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டின் 'கிங்' ஆக உள்ள மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு (Maruti Suzuki Ertiga) நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெலிவரி (Delivery) செய்யும் பணிகளும் கூடிய விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 23, 2025, 14:06 [IST]
English summary
Renault triber facelift launched in india price features engine gearbox options
மேலும்... #renault #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+