7 சீட்டர், 18 கி.மீ மைலேஜ் தரும் காரில் இப்ப இவ்வளவு அப்டேட் வந்துடுச்சா?
ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் தனது டிரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த இந்த காரின் தற்போதைய லுக்கிற்கும் பழைய காரின் லுக்கிற்கும் என்னென்ன விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் அதிக அளவில் விற்பனையாகி வரும் நிலையில் ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த கார் 4 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ஆத்தென்டிக், எவால்யூஷன், டெக்னோ, எமோசன் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

இந்த அப்டேட்ட மிட் சைக்கிள் அப்டேட்டில் அந்த காரின் அஸ்தெடிக், பாதுகாப்பு மற்றும் தொழிற்நுட்பம் ஆகிய அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை ஒவ்வொரு பகுதியாக விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்த ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் காரில் வெளிப்புறம் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. பழைய காரில் சாஃப்டான டிசைன் மொழி பின்பற்றப்பட்டிருந்தது. புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் முன்பக்க முகப்பு பகுதி முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஸ்கல்ப்டடனா டிசைனில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பக்கம் கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்ட லோகோ, அதில் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட லோகோ ஹெலஜென் ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

பக்கவாட்டு பகுதியில் பழைய டிசைனிலிருந்து பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஒரு சில மாற்றமாக 15 இன்ச் ஃபிளக்ஸ் ஸ்டீல் வீல்கள், கிளாஸியான டோர் ஹேண்டில் பழைய ரூஃப் ரெயில்கள், ஒஆர்விஎம் எல்லாம் பழைய காரில் உள்ளதை போலவே உள்ளன. பின்பக்கம் பம்பர் வடிவமைப்பு, ஸ்மோக்டு டெயில் லைட், கருப்பு நிற ரூஃப் ஆகிய அம்சங்கள் உள்ளன.
ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் காரை பொருத்தவரை 6 கலர் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி ஷாடோ கிரே, ஆம்பர் டெரகோட்டா, ஸான்கர் ப்ளூ ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் அளவுகளில் பெரிய மாற்றங்கள் இல்லை பழைய காரின் அதே அளவுகள் தான் இந்த காரிலும் இருக்கிறது.

ரெனால்ட் டிரைபர் காரின் உட்புறும் அஸ்தெடிக் மாற்றத்தை உட்புறத்தில் கொண்டு வருகிறது. இதில் பிளாக் சில்வர் தீமில் இது தீமை சிறப்பாக்குகிறது. இது போக இடவசதியை அதிகமாக இருக்கும் லுக்கில் வழங்கியுள்ளது. புதிய டேஷ்போர்டு டிசைன் கைகர் காரில் இருப்பது போன்ற லுக்கில் இருக்கிறது.
இந்த காரில் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 8 இன்ச் ஃப்ரீ ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, இதில் ஏசி வென்ட்கள் உள்ளன. இது போக வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள் உள்ளன. இந்த காரீன் சீட்டிங் அரேஜ்மென்ட் எல்லாம் 7 சீட்டர் எம்பிவி காராக 60:40 ஸ்பிளிட் சீட் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த காரின் இன்ஜின் எல்லாம் அதே தான். இந்த காரின் ஏஎம்டி வெர்ஷன் 18.29 கி.மீ மைலேஜை வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் டிரைபர் காரை அப்டேட் செய்துள்ள நிலையில் பழைய மற்றும் புதிய கார்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









