விலை தரமட்டத்துக்கு குறைஞ்சிருச்சு! 7 பேர் போற காரை இனி இவ்ளோ கம்மியான ரேட்ல வாங்கலாமா! புக்கிங் குவிய போகுது!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் காரை வாங்க வேண்டும் என்றால், உங்கள் முன் இருக்கும் மிகச்சிறந்த ஆப்ஷன் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் கார்களில் ஒன்றாகும். மிகவும் விலை குறைவானது என்பதால், ரெனால்ட் ட்ரைபர் காரில், போதுமான வசதிகள் (Features) இருக்காது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

ஏனெனில் ரெனால்ட் ட்ரைபர் காரில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 17.78 செமீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய முன் பக்க வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Renault Triber Side Design

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள் மற்றும் முன் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்கள் எல்லாம் ரெனால்ட் ட்ரைபரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை ரெனால்ட் ட்ரைபர் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ரெனால்ட் ட்ரைபர் ஏற்கனவே விலை குறைவான ஒரு கார்தான்.

Renault Triber MPV

ஆனால் ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பால், ரெனால்ட் ட்ரைபர் காரின், விலை தற்போது மேலும் குறைந்துள்ளது. முன்பு ரெனால்ட் ட்ரைபர் காரின் அத்தன்டிக் வேரியண்ட்டின் விலை 6,29,995 ரூபாயாக இருந்தது. இது தற்போது வெறும் 5,76,300 ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் எவாலூசன் வேரியண்ட்டின் விலை முன்பு 7,24,995 ரூபாயாக இருந்தது. இது தற்போது 6,63,200 ரூபாயாக குறைந்துள்ளது.

அதேபோல் டெக்னோ வேரியண்ட்டின் விலை முன்பு 7,99,995 ரூபாயாக இருந்தது. இது தற்போது 7,31,800 ரூபாயாக குறைந்துள்ளது. அதே சமயம் எமோஷன் வேரியண்ட் முன்பு 8,64,995 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டிருந்தது. இதன் விலை தற்போது 7,91,200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எமோஷன் ஏஎம்டி வேரியண்ட்டின் விலை முன்பு 9,16,995 ரூபாயாக இருந்தது. இது தற்போது 8,38,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எமோஷன் மேனுவல் ட்யூயல் டோன் வேரியண்ட் முன்பு 8,87,995 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது 8,12,300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ரெனால்ட் ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டான எமோஷன் ஏஎம்டி ட்யூயல் டோன் வேரியண்ட் முன்பு 9,39,995 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது 8,59,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் அனைத்தும் ரெனால்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தற்போது பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் வரும் செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜிஎஸ்டி வரி குறைப்பால், ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 5,76,300 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த விலைக்கு 7 சீட்டர் கார் கிடைப்பதால், அதிக உறுப்பினர்களை கொண்ட அளவில் பெரிய குடும்பங்களை சேர்ந்தவர்கள், இனி ரெனால்ட் ட்ரைபர் காரை வாங்க அதிக அளவில் முன்வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 8, 2025, 14:28 [IST]
English summary
Renault triber new price list post gst cut
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+