மாருதி பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் விலை குறைவான 7 சீட்டர் கார்! வேடிக்கைய மட்டும் பாருங்க!

அனைத்து கார் நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்து புதிய மாடலாக விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அப்போதுதான் போட்டியை சமாளித்து, சந்தையில் தாக்கு பிடிக்க முடியும். இந்த அப்டேட்களின்போது டிசைனில் மாற்றங்கள் செய்யப்படும். அத்துடன் புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்படும். இதன் காரணமாக புதிய மாடல் விற்பனைக்கு வரப்போகிறது என்றால், பழைய மாடலை வாங்குவதை வாடிக்கையாளர்கள் தவிர்த்து விடுவார்கள். இதன் காரணமாக பழைய மாடலின் விற்பனை சரிவடைய தொடங்கும். ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காருக்கு தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறதோ? என எண்ண தோன்றுகிறது.

இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான எம்பிவி ரக கார்களில் ஒன்றாக ரெனால்ட் ட்ரைபர் திகழ்கிறது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரெனால்ட் ட்ரைபர் காருக்கு விற்பனையில் பயங்கர அடி விழுந்துள்ளது.

Renault Triber Top View

ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 1,401 ட்ரைபர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,671 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 16 சதவீத வீழ்ச்சி ஆகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால்தான் வீழ்ச்சி என்றால், நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டாலும் கூட, ரெனால்ட் ட்ரைபர் விற்பனையில் வீழ்ச்சியையே சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 1,552 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Renault Triber

ஆனால் இந்த எண்ணிக்கையானது, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,401 ஆக சரிவடைந்துள்ளது. இது 9.73 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் இது தற்காலிக சரிவாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவிலயே ரெனால்ட் ட்ரைபர் புது பாய்ச்சலுடன், விற்பனையில் முன்னேறலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

ரெனால்ட் ட்ரைபர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு வரவிருப்பதுதான் இதற்கு காரணம். ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் (2025 Renault Triber Facelift) மாடலின் சோதனை ஓட்டம், இந்திய சாலைகளில் தற்போது நடைபெற்று கொண்டுள்ளது.

எனவே வரும் டிசம்பர் மாதத்திற்குள்ளாகவே 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலின் டிசைனை (Design) பொறுத்தவரையில், ஹெட்லைட்கள், டெயில்லைட்கள், க்ரில் அமைப்பு ஆகிய அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் புதிய கலர் ஆப்ஷன்கள், புதிய டிசைன் கொண்ட டேஷ்போர்டு மற்றும் அப்டேட் செய்யப்பட்ட அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். தற்போது விற்பனையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் மாடலில் 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ, 17.78 செமீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

ஆனால் விற்பனைக்கு வரவுள்ள புதிய மாடலில், தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய அளவிலான டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.

ஆனால் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், டிசைன் மற்றும் வசதிகளில் மட்டுமே மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரெனால்ட் ட்ரைபர் காரின் தற்போதைய மாடலில், 1.0 லிட்டர் 3 சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இதே இன்ஜின்தான் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாமல் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலையில் நாம் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டாக இருப்பது RXE ஆகும். இதன் விலை 6.15 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டாக இருப்பது RXZ AMT DUALTONE ஆகும். இதன் விலை 8.98 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை இதைக்காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம்.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று உயர்ந்தாலும் கூட, தொடர்ந்து இந்தியாவின் விலை குறைவான எம்பிவி ரக கார்களில் ஒன்றாகவே திகழும் என நாங்கள் கருதுகிறோம். அதாவது விலை சிறிய அளவில்தான் உயர்த்தப்படும் என்பது எங்களது எதிர்பார்ப்பு.

இது 7 இருக்கைகளை கொண்ட ஒரு கார் ஆகும். எனவே மலிவான விலையில் ஒரு 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் ட்ரைபர் நல்ல ஆப்ஷன். இந்த காருடைய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற எம்பிவி ரக கார்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, May 16, 2025, 18:12 [IST]
English summary
Renault triber sales report april 2025 16 per cent down
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+