ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் 7 சீட்டர் கார்! அடி மாட்டு ரேட்டுக்கு எப்படி குடுக்கறாங்கன்னே தெரியல!

குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள் இருந்தால், வாடிக்கையாளர்கள் எம்பிவி (MPV) ரக கார்களை தேர்வு செய்கின்றனர். எம்பிவி ரக கார்களில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு காரணம். இதன் காரணமாக இந்தியாவில் எம்பிவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக மிகவும் விலை குறைவான எம்பிவி ரக கார்கள் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்கின்றன. விலை குறைவான எம்பிவி கார் என்றால், அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது, ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) கார்தான்.

ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரின் விலையில் உங்களால் ரெனால்ட் ட்ரைபர் காரை வாங்கி விட முடியும். ஆம், ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. உண்மையை சொல்வதென்றால், இது ஒரு சில பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார்களின் விலையை விட குறைவு.

Renault Triber MPV

அதே நேரத்தில் ரெனால்ட் ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.97 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலை குறைவான காரில், 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும்.

இதன் காரணமாக ரெனால்ட் ட்ரைபர் காரை, ஏராளமான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர். எனவே கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனையில் ரெனால்ட் ட்ரைபர் கார் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக நமக்கு இது தெரிய வந்துள்ளது.

Renault Triber

ரெனால்ட் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,486 ட்ரைபர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதன் பின் வந்த டிசம்பர் மாதம், 1,659 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனையில் 10.43 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை குறைவு, அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுடன் சேர்த்து, ரெனால்ட் ட்ரைபர் கார் வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக இருப்பதற்கு இன்னும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இது பாதுகாப்பான கார் என்பதும் அதில் ஒன்று.

ஆம், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் ரெனால்ட் ட்ரைபர் கார் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்றுள்ளது. அத்துடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், ரெனால்ட் ட்ரைபர் காரில், அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 25, 2025, 21:09 [IST]
English summary
Renault triber sales report december 2024 over 10 per cent growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+