5 சீட்டர் காரை விட குறைவான விலையில் 7 சீட்டர் கார்! வீட்ல இருக்க அத்தன பேரையும் ஒன்னா ஏத்தீட்டு போகலாம்!

இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது கண்டிப்பாக ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காராகதான் இருக்கும். மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு போட்டியாக திகழும் ரெனால்ட் ட்ரைபர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை 5.76 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் 1,545 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஜனவரி மாதம் 1,456 ஆக மட்டுமே இருந்தது. இது 5.76 சதவீத வளர்ச்சி ஆகும்.

Renault Triber

இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் 2025 வெர்ஷன் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரெனால்ட் ட்ரைபர் காரின் வளர்ச்சிக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது ரெனால்ட் ட்ரைபர் காரின் 2025 வெர்ஷன் மட்டுமே.

ஆனால் கூடிய விரைவில் ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரின் புதிய தலைமுறை மாடலையே விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. புதிய தலைமுறை மாடல் என்றால், ஏராளமான மாற்றங்கள் இருக்கும். எனவே புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர் ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Maruti Suzuki Ertiga

அனேகமாக நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே புதிய தலைமுறை ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.10 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 8.75 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலை நிர்ணயமும், 7 பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான இருக்கை அமைப்பும்தான் ரெனால்ட் ட்ரைபர் காரை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வைத்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட கூடிய ஒரு சில ஹேட்ச்பேக் ரக கார்களை (5 சீட்டர்) காட்டிலும், ரெனால்ட் ட்ரைபர் விலை குறைவானது. ஹேட்ச்பேக் கார் விலையில் எம்பிவி ரக கார் என்பதால், நிறைய வாடிக்கையாளர்கள் ரெனால்ட் ட்ரைபர் காரை தேர்வு செய்கின்றனர்.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை மாடலின் வருகை ரெனால்ட் ட்ரைபர் காருக்கு பலம் சேர்க்கும் அதே நேரத்தில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எம்பிவி ரக காரின் வருகை, ரெனால்ட் ட்ரைபர் காருக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்.

ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 6 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் 7 பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான புதிய காம்பேக்ட் எம்பிவி ரக கார் ஒன்றை 2026ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ரெனால்ட் ட்ரைபருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்பதால், வரும் காலத்தில் இந்த 2 எம்பிவி கார்களுக்கும் இடையில் போட்டி அனல் பறக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 23:54 [IST]
English summary
Renault triber sales report february 2025 6 per cent mom growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+