வெறும் ஆறே லட்சத்துக்கு 7 பேர் போற காரை வித்துட்டு இருக்காங்களா! அப்ப கண்ண மூடிட்டு வாங்கலாம்!

இந்திய சந்தையில் எம்பிவி ரக கார்களை (MPV Cars) வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. எம்பிவி ரக கார்களில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு காரணம். ஆனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான எம்பிவி ரக கார்களின் விலை சற்று அதிகம். எனினும் குறைவான விலையிலும் உங்களால் எம்பிவி ரக காரை நிச்சயமாக வாங்க முடியும். நீங்கள் குறைவான விலையில் எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என்றால், ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) மிகவும் சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (RXE) விலை வெறும் 6,14,995 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் ரெனால்ட் ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டின் (RXZ AMT ட்யூயல் டோன்) விலை 8,97,995 ரூபாயாக இருக்கிறது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.

Renault Triber Top View

மறுபக்கம் ரெனால்ட் ட்ரைபர் காரின் போட்டி மாடலாக கருதப்படும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) இதை விட மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.97 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 13.26 லட்ச ரூபாயாக இருக்கிறது.

எனவே மாருதி சுஸுகி எர்டிகா உடன் ஒப்பிடும்போது, ரெனால்ட் ட்ரைபர் மிகவும் விலை குறைந்த காராக உள்ளது. இதன் காரணமாக குறைவான விலையில் எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக ரெனால்ட் ட்ரைபர் உள்ளது.

Renault Triber

இருப்பினும் கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ரெனால்ட் ட்ரைபர் காரின் கடந்த 2024-25ம் நிதியாண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது தெரிய வந்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் 19,905 ட்ரைபர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதற்கு முந்தைய 2023-24ம் நிதியாண்டில், 22,446 ஆக இருந்தது. இது 11 சதவீத வீழ்ச்சி ஆகும். இதன் காரணமாக கடந்த 2024-25ம் நிதியாண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஏழு இருக்கை கார்களின் பட்டியலில் (Top 10 7-Seater Cars), ரெனால்ட் ட்ரைபர் காருக்கு 10வது மற்றும் கடைசி இடம்தான் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி எர்டிகா முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ரெனால்ட் ட்ரைபர் உடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி எர்டிகா சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, பல்வேறு விஷயங்களில் தலை சிறந்து விளங்குகிறது. இதன் காரணமாகவே மாருதி சுஸுகி எர்டிகா முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் ட்ரைபர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 6.25-9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். புதிய வசதிகள் மற்றும் டிசைன் அப்டேட்கள் காரணமாக விலை உயர்த்தப்பட்டாலும் கூட, ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தொடர்ந்து விலை குறைவான ஒன்றாகவே இருக்கும்.

எனவே ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்னர், ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைன் மற்றும் வசதிகளின் பட்டியலில் மேம்பாடுகள் செய்யப்பட்டாலும் கூட, தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் தொடர்ந்து வழங்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 27, 2025, 23:32 [IST]
English summary
Renault triber sales report financial year 2024 25 11 per cent down
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+