வெறும் 6 லட்சத்துக்கு 7 பேர் போற காரா! அடி மாட்டு விலையில் வித்துட்டு இருக்காங்க!
இந்திய சந்தையில் 7 சீட்டர் கார்களுக்கான (7 Seater Cars) 'டிமாண்ட்' எப்போதும் அதிகமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் 7 சீட்டர் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளன. அப்படி ரெனால்ட் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு 7 சீட்டர் கார்தான் ட்ரைபர் (Renault Triber). இது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு காராக இருந்தாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது.
ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 1,552 ட்ரைபர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 2,247 ஆக இருந்தது. இது 37 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஏழு இருக்கை கார்களின் பட்டியலில் ரெனால்ட் ட்ரைபர் காருக்கு 10வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
இன்னும் ஒரு சில மாதங்களில், புதிய தலைமுறை ரெனால்ட் ட்ரைபர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்து விடும். எனவே புதிய தலைமுறை மாடலின் வருகைக்காக சாத்தியமுள்ள ரெனால்ட் ட்ரைபர் காரின் வாடிக்கையாளர்கள் சற்று காத்திருக்கலாம் என்ற முடிவை எடுத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை சரிவிற்கான காரணமாக இருக்கலாம். பொதுவாக ஒரு காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வரப்போகிறது என்றால், அதற்கு முன்பாக விற்பனையில் சரிவு ஏற்படுவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். ஏனெனில் புதிய தலைமுறை மாடலின் டிசைன் 'ஃப்ரெஷ்' ஆக இருக்கும்.
அத்துடன் ஏராளமான புதிய வசதிகளும் வழங்கப்படும். எனவே பழைய மாடலை விட, புதிய மாடலை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதன் காரணமாக பழைய மாடலின் விற்பனை குறையும். ரெனால்ட் ட்ரைபர் காரின் தற்போதைய சரிவிற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.
இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 6.10 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. எனவே இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான 7 சீட்டர் கார்களில் ஒன்றாக ரெனால்ட் ட்ரைபர் திகழ்கிறது. அதே நேரத்தில் ரெனால்ட் ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.98 லட்ச ரூபாய் மட்டுமே.
இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வரும் சமயத்தில் அதன் விலை சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் விலை குறைவான 7 சீட்டர் கார்களில் ஒன்று என்ற பெருமையை ரெனால்ட் ட்ரைபர் தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் ட்ரைபர் காரின் புதிய தலைமுறை மாடல், நடப்பு 2025ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஜூன் மாதத்திற்கு ரெனால்ட் ட்ரைபர் காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








