வெறும் 6 லட்சத்துக்கு 7 பேர் போற காரா! கூடவே பாதுகாப்பு வசதிகளையும் போதும் போதும்ங்கற அளவு குடுத்துருக்காங்க!
இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் எம்பிவி ரக காரை (7 Seater MPV Car) வாங்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு இருக்கும் மிகச்சிறந்த ஆப்ஷன்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber).
ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.15 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.98 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் இவ்வளவு குறைவான விலையில் கிடைத்தாலும் கூட, ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை மந்தமாகவே இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சுமாராக 1,500 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனையாகி வருகின்றன. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதமும் ரெனால்ட் ட்ரைபர் காரின் மந்தமாகவே இருந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், வெறும் 1,411 ட்ரைபர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், 2,116 ஆக இருந்தது.

இது 33 சதவீத வீழ்ச்சி ஆகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, ரெனால்ட் ட்ரைபர் கார் வீழ்ச்சியையே சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 1,401 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் அதன்பின் வந்த மே மாதம், இந்த எண்ணிக்கை நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 1,411 ஆக சற்றே உயர்ந்துள்ளது. இது 0.71 சதவீத வளர்ச்சி ஆகும். ஆனால் இது மிகவும் சிறிய அளவிலான வளர்ச்சி மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ரெனால்ட் ட்ரைபர் கார் மிகவும் விலை குறைவானது மற்றும் 7 பேர் பயணம் செய்யலாம் என்பதுடன், ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) வழங்கப்படுகின்றன. சரியாக சொல்வதென்றால், ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி ரக காரில், ஒட்டுமொத்தமாக 17 பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஸன் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர், பிரேக் அஸிஸ்ட் உடன் ஏபிஎஸ் + இபிடி, அதிவேகமாக சென்றால் எச்சரிக்கை செய்யும் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும் கூட, ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை மந்தமாகவே இருந்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அனேகமாக நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே புதிய தலைமுறை ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர், ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை எண்ணிக்கை உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








