மாருதியை வெடவெடத்து போக வைத்த புதிய 7 சீட்டர் கார்! பைக் விலையில் வித்து தள்ளீட்டு இருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என நினைத்தால், நிச்சயம் ரெனால்ட் ட்ரைபர்தான் (Renault Triber) அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வரும். குறைவான விலை என்பதாலும், 7 பேர் பயணம் செய்ய முடியும் என்பதாலும், ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இதற்கு தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ஒரு உதாரணம் மட்டுமே. ரெனால்ட் ட்ரைபர் 7 சீட்டர் எம்பிவி ரக காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் கார் அண்டு பைக் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Renault Triber Side Design

இதன்படி பார்த்தால், ரெனால்ட் நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 2,064 ட்ரைபர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 1,486 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 578 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ரெனால்ட் ட்ரைபர் காரின் இந்த வளர்ச்சிக்கு வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். ரெனால்ட் ட்ரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த ஜூலை மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Renault Triber

அத்துடன் ஜிஎஸ்டி வரி (GST) குறைப்பு காரணமாக, ரெனால்ட் ட்ரைபர் காரின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, ரெனால்ட் ட்ரைபர் கார் வளர்ச்சி பாதையில் செல்ல உதவியுள்ளன. தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.60 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே ரெனால்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ரெனால்ட் ட்ரைபர் காரில், ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.

இதில், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 17.78 செமீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், மழை வந்தால் தானாகவே இயங்கும் முன் பக்க ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் மற்றும் தேவைப்படும் சமயங்களில் தானாகவே ஆன்/ஆஃப் ஆகி கொள்ளும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் போன்றவை எல்லாம் இந்த காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.

இவை எல்லாம் தவிர, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கும் அம்சம், ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட் உடன் இபிடி, அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) ரெனால்ட் ட்ரைபர் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ரெனால்ட் ட்ரைபர் திகழ்கிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 8.80 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டின் விலையே வெறும் 8.60 லட்ச ரூபாய் மட்டும்தான்.

எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ரெனால்ட் ட்ரைபர் மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும். இன்னும் சொல்லப்போனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு சில விலை உயர்ந்த பிரீமியம் பைக்குகளை விட ரெனால்ட் ட்ரைபர் காரின் விலை குறைவு.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 2, 2025, 17:36 [IST]
English summary
Renault triber sales report november 2025 2064 units sold
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+