மாருதிக்கு எமன்! வெறும் அஞ்சே முக்கா லட்சத்துக்கு 7 பேர் போற காரா! இதுக்கு மேலயும் எர்டிகாவ எல்லாம் வாங்கணுமா?

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் காரை வாங்க வேண்டும் என்றால், நிச்சயமாக ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) கார்தான் அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வரும். இது இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும்.

அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கடந்து விட்டதால் சமீப காலமாக ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை சற்று மந்தமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த ஜூலை மாதம் ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

Renault Triber Side Design

இதன் காரணமாகவும், ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் தீபாவளி பண்டிகை காலம் உள்ளிட்ட காரணங்களாலும், தற்போது ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால், ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 3,170 ட்ரைபர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 2,111 ட்ரைபர் கார்களை மட்டுமே ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

Renault Triber

அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1,059 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனையில் 50 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் இந்த காரின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை, ரெனால்ட் ட்ரைபர் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.60 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும். இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் ட்ரைபர் காரில் புதிதாக ஒரு சக்தி வாய்ந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட வேண்டும் என இந்திய வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அது நடக்கும்பட்சத்தில், ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 14, 2025, 22:53 [IST]
English summary
Renault triber sales report october 2025 50 per cent growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+