3 நாளில் 24 உலக சாதனைகளை படைத்த எலெக்ட்ரிக் கார்! இதுல போக குடுத்து வைக்கனும்!

உலகின் வேகமாக பயணிக்கும் எலெக்ட்ரிக் கார் எது தெரியுமா? ரிமேக் நிறுவனத்தின் நிவேரா ஆர் என்ற ஹைப்பர் கார் தான் உலகிலேயே அதிக வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் காராக இருக்கிறது. இந்த கார் மொத்தம் 24 உலக சாதனைகளை படைத்துளளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

குரோஷியா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தான் ரிமேக் இந்நிறுவனம் நிவேரா ஆர் என்ற எலெக்ட்ரிக் காரை உருவாக்கியுள்ளது. இந்த கார் உலகிலேயே அதிக வேகத்தில் பயணிக்கும் வகை எலெக்ட்ரிக் ஹைப்பர் காராக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 3 நாட்களில் மொத்தம் 24 உலக சாதனைகளை படைத்துள்ளது.

Rimac Nevera R hypercar

இந்த கார் கடந்த 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஜெர்மனியில் பாப்பென் பெர்க் என்ற டிராக்கில் ஓட்டப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ்ப்பொது தான் இந்த கார் 24 உலக சாதனைகளை படைத்தது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை பிக்கப் செய்தது முதல் 400 கி.மீ வேகத்தில் இருந்து 0 கி.மீ வேகத்திற்கு வேகத்தை குறைத்தது வரை சாதனைகளை படைத்துள்ளது.

இந்த காரில் 120 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளுது. இது 2017 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் 0-1000 மீட்டர் தூரத்தை வெறும் 21.6 நொடியில் கடந்துள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 431 கி.மீ வேகத்தில் பயணிக்கம் திறன் கொண்டது. ஆனால் பெட்ரோல் கார்கள் இதை விட அதிக வேகத்தில் பயணிக்கும் வகையில் உள்ளன.

Rimac Nevera R hypercar

அஸ்பார்க் அவுல் எஸ் 600 கார் மணிக்கு 439 கி.மீ வேகத்திலும், புகாட்டி ஷிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார் மணிக்கு 490 கி.மீ வேகத்திலும் பயணிக்கும் திறனை கொண்டிருந்தாலும் எலெக்ட்ரிக் கார் உலகில் நிவேரா கார் தான் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.மற்ற கார்கள் பெட்ரோல் பவரில் இயங்கும் திறன் கொண்டவையாக தயாரிக்கப்பட்டுள்ளன.

நிவேரா ஆர் காரை பொருத்தவரை 0-100 கி.மீ வேகத்தை 1.752 நொடியிலும் 0-200 கி.மீ வேகத்தை 3.95 நொடியிலும், 0-300 கி.மீ வேகத்தை 7.89 நொடியிலும், 0-400 கி.மீ வேகத்தை 17.35 நொடியிலும், 10-200 கி.மீ வேகத்தை 2.22 நொடியிலும், 200-250 கி.மீ வேகத்தை 1.65 நொடியிலும், 200-300 கி.மீ வேகத்தை 3.89 நொடியிலும், பிக்கப் செய்கிறது.

Rimac Nevera R hypercar

இந்த கார் 201 மீட்டர் தூரத்தை 5.25 நொடியிலும், 402 மீட்டர் தூரத்தை 7.90 நொடியிலும், 805 மீட்டர் தூரத்தை 12.26 நொடியிலும், 1.6 கி.மீ தூரத்தை 19.71 நொடியிலும் கடந்து சாதனை படைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த காரின் பிரேக்கிங் திறனும் சாதனை படைத்துள்ளது.

அதன்படி 0 கி.மீ வேகத்தில் இருந்து 100 கி.மீ வேகத்திற்கு சென்று மீண்டும் 0 கி.மீ வேகத்திற்கு வர 4.12 நொடிகளை எடுத்துக்கொண்டது. அதே போல 0-200-0 வர 8.58 நொடிகளையும், 0-300-0 வர 14.49 நொடிகளையும், 0-400-0 வர 25.79 நொடிகளையும் எடுத்துக்கொண்டது. இப்படியாக மொத்தம் 24 விதமான சாதனைகளை இந்த கார் செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் கார்கள் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இந்நிலையில் இப்படியான எலெக்ட்ரிக் சூப்பர் கார்கள் தயாரிக்கப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நமபிக்கையை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, July 14, 2025, 11:15 [IST]
English summary
Rimac nevera r hypercar sets 24 records in 3 days
மேலும்... #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X