புதுசா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தியால விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கு.. இதுவாச்சும் நாம வாங்குற விலைல இருக்கா!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் (Luxury Car) உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) இந்தியாவில் தன்னுடைய புதிய தயாரிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கோஸ்ட் சீரிஸ் II (Ghost Series II)-வையே அது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவின் பெரும் பணக்காரர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடலே கோஸ்ட் ஆகும். மேலும், முகேஷ் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாகவும் கோஸ்ட் உள்ளது.

இந்த நிலையிலேயே கூடுதலாக செல்வந்தர்களை தன் பக்கம் வளைத்துப் போடும் விதமாக கோஸ்ட் சீரிஸ் 2-வை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 8.95 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Rolls royce ghost series ii launched

இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 10.52 கோடி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

சீரிஸ் 2 (Series II), எக்ஸ்டென்டட் சீரிஸ் 2 (Extended Series II) மற்றும் பிளாக் பேட்ஜ் சீரிஸ் 2 (Black Badge Series II) ஆகியவையே அவை ஆகும். இதில் உயர் நிலை தேர்வாக பிளாக் பேட்ஜ் சீரிஸ் 2 உள்ளது. மிகவும் கவர்ச்சியான அலங்கரிப்பு மற்றும் அதிக சொகுசு வசதிகளைத் தாங்கியதாக இதுவே இருக்கின்றது.

இதனால்தான் அதன் விலையும் நம்ப முடியாத அளவிற்கு மிக அதிகமாக உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பல நிலைகளில் புதிய கோஸ்ட் சீரிஸ் 2-வை அப்கிரேட் செய்து இருக்கின்றது. வெளிப்புறம் மற்றும் உட்பக்கம் என அனைத்திலும் கணிசமான மாற்றங்களை பார்க்க முடிகின்றது.

குறிப்பாக, இதன் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், பம்பர் உள்ளிட்டவற்றே லேசாக அப்டேட் செய்திருக்கின்றது ரோல்ஸ் ராய்ஸ். ஆகையால், இது முன்பைவிட இப்போது கூடுதல் அழகான காராக காட்சியளிக்கின்றது. இதேபோல், உட்பக்கத்திலும் கணிசமான மாற்றங்களை இந்த காரில் செய்திருக்கின்றனர். டேஷ்போர்டு சற்றே மெருகேற்றப்பட்டு இருக்கின்றது.

இந்த மாதிரியான சொற்ப அளவிலான மாற்றங்களையே செய்து உள்ளனர். இருப்பினும், இந்த அப்டேட்டே போதுமானதாக உள்ளது. இத்துடன், டிரைவருக்காக முழு டிஜிட்டல் திரை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் தற்போது இணைப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுபோன்ற சில சிறப்பு சேர்ப்பு வேலையையும் இந்த காரில் ரோல்ஸ் ராய்ஸ் பார்த்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை ட்வின் டர்போசார்ஜட் வி12 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் நான்கு வீல்களுக்கும் ஆற்றலை கடத்தும். இதே மோட்டாரே பிளாக் பேட்ஜ் வெர்ஷனிலும் பயன்படுத்தி இருக்கின்றனர். முதல் இரண்டு தேர்வுகளில் இருப்பதைக் காட்டிலும் இதில் சற்றே அதிக ஆற்றலை இந்த ட்வின் டர்போசார்ஜட் வி12 மோட்டார் வெளிப்படுத்தும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அம்பானி பெரும் பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான பணக்கார்களை வளைத்துப் போடும் பொருட்டே தற்போது புதிதாக்கப்பட்ட கோஸ்ட் சீரிஸ் 2 கார் மாடலை நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2025, 21:34 [IST]
English summary
Rolls royce ghost series ii launched in india starting at rs 8 95 crore
மேலும்... #rolls royce #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+