உலகத்துலயே 25 கார் தான் தயாரிச்சிருக்காங்க! அதுவும் மிஷில் இல்லாமா கையாலயே செதுக்கிருக்காங்க!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது பாந்தோம் சென்டினேரி கலெக்ஷன் காரின் லிமிடெட் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பாந்தோம் காரின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த லிமிடெட் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெறும் 25 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரோல்ஸ் ராய்ஸ் கார் உலகின் அதிக சொகுசு கார்களை தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறதுஇ.இந்நிறுவனம் தனது தனித்துவமான லிமிடெட்ட எடிசன் பாந்தோம் சென்டினேரி காரை அறிமுகப்படுத்யுள்ளது. இந்த கார் 25 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இந்த கார் சிறப்பான வடிவமைப்பில் உருவாக்கப்படுகிறது. பவர் மற்றும் டிசைனில் தனித்துவம் பெற்றதாக இருக்கிறது.

Rolls Royce Phanthom

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 1925ம் ஆண்டு தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது சொகுசு மற்றும் ராயலிட்டியை வெளிப்படுத்தும் விதமான காராக இருக்கிறது. இந்நிலையில் இந்த 100 ஆண்டை கொண்டாடும் வகையில் சென்டினேரி என்ற ஸ்பெஷல் எடிசனை உருவாக்கியுள்ளது. இந்த காரை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இணைந்து சுமார் 40,000 மணி நேரம் வேலை செய்து இந்த காரை உருவாக்கியுள்ளனர்.

இந்த காரின் வெளிப்புறம் கருப்பு மற்றும் வெள்ளை நிற கிளாசிக் எரா ஹாலிவுட்டை நினைவுபடுத்தும்விதமாக வடிவமைக்கப்பட்டள்ளது. மேலும் இந்த காரில் உள்ள கோல்டன் ஹைலைட்டை வழங்கும் வகையில் ரீகல் டச் இருக்கிறது. முன்பக்க கரில் தனித்துவமாக இருக்கிறது. இது 18 கேரட் தங்கத்தைத வைத்து தயாரித்து 24 கேரட் தங்கத்தால் பிளேட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் நடுவில் ஹால்மார்க் சீல் உள்ளது. இது லண்டனில் உள்ள ஹார்மார்க்கிங் & அஸ்ஸி அலுவலவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Rolls Royce Phanthom

இந்த காரின் உட்புறம் ரோல்ஸ் ராயில் ஸ்டைல் மற்றும் சொகுசு அம்சம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக உட்புறம் துல்லியமாக பிரிண்ட் செய்யப்பட்ட ஃபேப்ரிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தங்க நிற எம்ராய்டரி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக புதிய இங்க் மற்றும் பினிஷ் மெத்தடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 45 தனித்துவமான பேனல்கள் உருவாக்கப்பட்டு அது முற்றிலுமாக கையால் வடிவமைக்கப்பட்டு மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காரில் மர வேலைப்பாடுகள் பிளாக் வுட் வீனீர் வென்ற மரத்தை வைத்து உருவாக்கியுள்ளார்கள். மேலும் டிசைனிற்காக 3d மார்க்கெட் மற்றும் மிகத் தின்னான 24 கேரட் கோல்டு லீஃப் கொண்டு பல்வேறு வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த கார் தனித்துவமான வடிவமைப்பை கொண்டதாக இருக்கிறது. பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பல இடங்களில் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் மிக அதிக விலை கொண்டதாக இந்த கார் இருக்கிறது.

Rolls Royce Phanthom

இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 6.75 லிட்டர் ட்வின் டர்போவில் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதை ஆர்டிக் வைட் இன்ஜின் கவர் கொண்டு வடிவமைத்துள்ளார்கள். இதில் 24 கேரட் கோல்டு டீடைல்களும் வழங்கப்பட்டுள்ளன. இன்ஜின் பகுதியிலேயே தங்கம் வழங்கப்பட்டுள்ளதால் இந்த கார் மிக ஆச்சரியமான ஒரு விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. இந்த கார் ஒரு லிமிடெட் எடிசன் காராகவும் இந்த காரை வெறும் 25 கார்கள் மட்டுமே தயாரிக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த 25காரர்கள் மட்டும்தான் பயன்பாட்டில் இருக்கும் இந்தியாவில் இந்த காரை யாரும் வாங்கிறார்களா என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த லிமிடெட் எடிசன் காரை உருவாக்கி தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் மேலும் தனித்துவமான தனது தயாரிப்பை வழிகாட்டுவதற்காகவும் 25 கார்களை தயாரிக்கிறது. இந்த கார் இந்தியா வருமா என்ற விவரம் தெரியவில்லை. வந்தால் நிச்சயம் இந்த காரை பார்ப்பதற்காகவே ரோடு பெரிய கூட்டம் கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, October 25, 2025, 10:50 [IST]
English summary
Rolls royce phantom centenary edition breaks cover 25 units
மேலும்... #rolls royce
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X