மொத்த சொத்தையும் விற்றால் கூட வாங்க முடியாத கார்! ரோல்ஸ்-ராய்ஸ் உருவாக்குன எலக்ட்ரிக் கார் என்றால் சும்மாவா!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) நிறுவனத்திற்கும் அதன் கார்களுக்கும் அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் உலகளவில் பிரபலமாக உள்ளன. பிரபலமாக இருப்பது மட்டுமின்றி, ரோல்ஸ்-ராய்ஸ் கார் வைத்திருந்தாலே தனி கௌரவம் என செல்வந்தர்கள் பலர் நினைக்கும் அளவுக்கு ஒரு ஸ்டாண்டர்டை ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் செட் செய்து வைத்துள்ளன. இதனால்தான், உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) சுமார் 10க்கும் மேற்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வைத்துள்ளார்.

இருப்பினும், மற்ற கார் நிறுவனங்களை போன்று எலக்ட்ரிக் கார்களை உருவாக்க ரோல்ஸ்-ராய்ஸ் மிகவும் தயக்கம் காட்டியது. இருப்பினும், ஒருவழியாக சில வருடங்களுக்கு முன்பு ஸ்பெக்டர் இவி (Spectre EV) என்கிற தனது முதல் எலக்ட்ரிக் காரை ரோல்ஸ்-ராய்ஸ் விற்பனைக்கு கொண்டுவந்தது. உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களில் ஸ்பெக்டர் இவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

spectre ev black badge edition

இந்த நிலையில், தற்போது ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரில் புதியதாக பிளாக் பேட்ஜ் (Black Badge) என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.9.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது வழக்கமான ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் ரூ.1.88 கோடி அதிகமாகும்.

ஏனெனில், ஸ்பெஷல் எடிசன் அல்லாத ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.62 கோடி ஆக தற்சமயம் உள்ளது. ரோல்ஸ்-ராய்ஸ் கார்களில் எக்ஸ்-ஷோரூம் விலைகள் எல்லாம் அவற்றின் மொத்தம் மதிப்பில் 60% மட்டுமே ஆகும். இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணம் மற்றும் சாலை வரி என இதற்கு சில கோடி ரூபாய்கள் கூடுதலாக செலவாகும்.

spectre ev black badge edition

இவை மட்டுமின்றி, பொதுவாகவே ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிய பின்னரே டெலிவிரி பெறுவர். இதற்காக பல்வேறு கஸ்டமைசேஷன் (Customisation) ஆப்ஷன்களை ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் வழங்குகிறது. குறிப்பாக, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரின் வெளிப்பக்க மற்றும் உட்புற அலங்கரிப்புகளுக்காக மட்டும் சுமார் 44 ஆயிரம் கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதற்கு தனியாக சில கோடி ரூபாய்கள் அதிகமாக செலவாகும். ஆக மொத்தத்தில் எக்ஸ்-ஷோரூம் விலை உடன் சேர்த்து கூடுதலாக ரூ.5 கோடி வரையில் செலவாகும். ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் டெல்லியிலும், சென்னையிலும் ஷோரூம்கள் உள்ளன. இந்த இரு ஷோரூம்களிலும் புதிய ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

spectre ev black badge edition

கடந்த பிப்ரவரி மாதத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட ஸ்பெக்டர் இவி பிளாக் பேட்ஜ் கார் ஆனது தற்போதுவரையில் உருவாக்கப்பட்ட பவர்ஃபுல்லான ரோல்ஸ்-ராய்ஸ் காராக விளங்குகிறது. இந்த ரோல்ஸ்-ராய்ஸ் எலக்ட்ரிக் காரில் இருந்து அதிகப்பட்சமாக 659 எச்பி மற்றும் 1075 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.

0-இல் இருந்து இந்த புதிய ரோல்ஸ்-ராய்ஸ் காரில் வெறும் 4.1 வினாடிகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை எட்டிவிடலாம். வழக்கமான ஸ்பெக்டர் இவி காருக்கு 4.5 வினாடி தேவைப்படுகிறது. இருப்பினும், ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் அதே 102kWh பேட்டரி தான் புதிய ஸ்பெக்டர் இவி பிளாக் பேட்ஜ் காரிலும் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், புதிய ஸ்பெக்டர் இவி பிளாக் பேட்ஜ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை வேண்டுமாயின் ரூ.9.5 கோடியாக இருக்கலாம். ஆனால், இந்த காரை வாங்குவதற்கு மொத்தமாக ரூ.15 கோடி வரையில் செலவாகும். இத்தனை கோடி ரூபாய் விலை கொடுத்து காரை வாங்குவதற்கு நம் நாட்டில் ஆட்கள் உள்ளார்களா? என நீங்கள் கேட்கலாம். ஆனால், இந்நேரம் சில ஸ்பெக்டர் இவி பிளாக் பேட்ஜ் கார்கள் ஏற்கனவே இந்தியாவில் புக் ஆகி இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 24, 2025, 11:46 [IST]
English summary
Rolls royce spectre ev black badge edition launched in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X