பஸ், லாரி, ஆட்டோகளுக்கும் ஸ்டார் ரேட்டிங் வரப்போகுது! இனி ரோட்டுல சின்ன விபத்து கூட நடக்காது!

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, லாரிகள் மற்றும் கனரக வணிக வாகனங்களுக்கு பாதுகாப்பு ரேட்டிங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இந்த முயற்சியில் கார்களுக்கான பாரத் என்.சி.ஏ.பி. முறையைப் போன்ற மோதல் சோதனைகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.. வாகனங்கள் சோதனை முடிவுகளின் அடிப்படையில் 1 முதல் 5 ஸ்டார்கள் வரை பாதுகாப்பு ரேட்டிங் பெறும். கட்கரி இந்தத் தகவலை புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (என்.சி.ஏ.பி) மற்றும் சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.இ) நடத்திய நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

பேருந்துகள் மற்றும் லாரிகளும் இந்த பாதுகாப்பு ரேட்டிங் முறையில் சேர்க்கப்படுவது, உற்பத்தியாளர்களை உற்பத்தித் தரத்தை மேம்படுத்த ஊக்குவிக்கும். இதன் மூலம் வாகனப் பாதுகாப்பு அதிகரிக்கும். கூடுதலாக, எலெக்ட்ரிக் ரிக்‌ஷாக்களுக்கு புதிய விதிமுறை உருவாக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் ரிக்‌ஷாக்களில் ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக, பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் ரிக்‌ஷாக்களுக்கான தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு ரேட்டிங் முறையை அரசு உருவாக்கி வருகிறது.

Bharat Ncap Rating For Commercial Vehicle

எலெக்ட்ரிக் ரிக்‌ஷா பாதுகாப்பை மேம்படுத்துவது அவற்றின் தரத்தை அதிகரித்து, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலை பாதுகாப்பை அப்டேட் செய்தால், பாதுகாப்பான நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல், வாகனப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை (ஈ.வி) ஊக்குவித்தல் ஆகியவை அரசின் முன்னுரிமைகளாகும் என்று கட்கரி வலியுறுத்தினார்.

2023 ஆம் ஆண்டில், கட்கரி 3.5 டன் வரை எடையுள்ள மோட்டார் வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு தரங்களை உயர்த்தும் இலக்கை கொண்டு பாரத் என்.சி.ஏ.பி.யை அறிமுகப்படுத்தினார். இந்தியா ஆண்டுதோறும் மிக அதிக எண்ணிக்கையிலான மரணம் ஏற்படும் சாலை விபத்துக்களை சந்திப்பதாகவும், ஆண்டுக்கு 4.8 லட்சம் விபத்துகளில் 1.8 லட்சம் பேர் இறப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Bharat Ncap Rating For Commercial Vehicle

தற்போதைய 14-16 சதவிகிதத்தில் இருந்து வரும் ஆண்டுகளில் 9 சதவிகிதத்திற்கு சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. போக்குவரத்து துறையில் திறன் மேம்பாட்டிற்கான அதிக முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்.

லாரி ஓட்டுநர்களின் பணி நேரங்களுக்கான விதிமுறைகளை நிறுவுதல் என்பது மற்றொரு முக்கிய முயற்சியாகும். தற்போது லாரி ஓட்டுநர்கள் தினமும் 13-14 மணி நேரம் பணிபுரிகின்றனர். இது சோர்வு தொடர்பான விபத்துக்களைப் பற்றிய கவலைகளை எழுப்புகிறது. இதனால் அதை கட்டுப்படுத்தி சரியான பணி நேரத்தை அமலுக்கு கொண்டு வருவதன் மூலம் விபத்துகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடியும்

Bharat Ncap Rating For Commercial Vehicle

சாலைப் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மை கவலைகளாகும், அவர்கள் இந்தியா முழுவதும் பாதுகாப்பான நெடுஞ்சாலைகளை உருவாக்கும் மற்றும் நிலையான போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிக்கும் என்று கட்கரி மீண்டும் வலியுறுத்தினார். இதனால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சாலை விபத்துகள் கணிசமான அளவு குறையும். அதே நேரம் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கையால் சரக்கு வாகனங்களுக்கான செலவு குறையவும் வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு பணி நேர கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அதிக ஓட்டுநர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் செலவுகள் கூடும் என்ற கருத்தும் தேவையில்லாதது தான். இதனால் வேகம் கூடும் சரக்குகள் விரைவாக டெலிவரியாகும். இது அதிகமாகும் செலவுகளை சமாளிக்க உதவும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 25, 2025, 13:47 [IST]
English summary
Nitin Gadkari announced a new safety rating system for trucks and e-rickshaws to enhance vehicle safety in India. This initiative aims to motivate manufacturers to improve production quality and reduce logistics costs, prioritising road safety and sustainable transport.
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X