விவாகரத்தான பிறகும் ரகசியமாக கணவரை சந்திக்கும் டென்னிஸ் வீராங்கனையிடம் இவ்வளவு காஸ்ட்லி காரெல்லாம் இருக்குதா

இந்திய டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கும் நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இரண்டு மாதத்தறி்கு ஒரு முறை துபாயில் நேரில் சந்தித்துக்கொள்வதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து மக்கள் அதிகம் பேசி வரும் நிலையில் சானியா மிர்ஸாவின் கார் கலெக்ஷனும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய டென்னீஸ் வீராங்கனையாக இருந்த சானியா மிர்ஸா கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக இருந்த சோயப் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டனர். சுமார் 14 ஆண்டுகள் இவர்கள் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து விட்டனர். இவர்கள் விவகாரத்து இஸ்லாமிய குலா முறைப்படி நடந்தது. இஸ்லாம் மத சட்டப்படி கணவனுடன் வாழ பிடிக்காத மனைவி விவகாரத்து செய்யும் முறை தான் குலா.

Sania Mirza Sohaib Malik

இதன்பிறகு சோயப் மாலிக் இரண்டாவதாக நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டா்ா. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சோயப் மாலிகிடம் அவருக்கும் சானியா மர்ஸாவுக்கும் பிறந்த மகன் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த சோயப் மாலிக் துபாயில் 2 மாதத்திற்கு ஒரு முறை சானியா மர்ஸாவுடன் வாழும் தனது மகனை நேரில் சந்தித்து வருவதாக பேசினார். இது தற்போது சமூகவலைதளங்களில் இவர்கள் பற்றி பேச்சை அதிகமாக்கியுள்ளது. இவர்கள் அவ்வப்போது சந்திப்பது குறித்து பலர் பேசி வரும் நிலையில் சானியா மிர்ஸாவிடம் உள்ள காஸ்ட்லியான கார்கள் குறித்தும் பலர் பேசி வருகின்றனர்.

தற்போது சானியா மிர்ஸாவிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் இருக்கிறது.அவர் தற்போது டென்னீஸ் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவருக்கு அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் சானியா மிர்ஸா சொந்தமாக லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர், மெர்சிடீஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களின் கார்கள் எல்லாம் எல்லாம் சொந்தமாக வைத்திருக்கிறார்.

Sania Mirza Sohaib Malik

இவரிடம் பிஎம்பிள்யூ நிறுவனத்தின் 7 சிரீஸ் கார் இருக்கிறது. இது போக ஜாக்குவா்ர நிறுவனத்தின் எக்ஸ்எஃப் காரும், லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் எவோக் காரும், போர்ஷே கேயன் காரும் சொந்தமாக வைத்துள்ளார். இவர் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒவ்வொரு விதமான காரை பயன்படுத்துகிறார்.

இவரிடம் இருக்கும் கார்களின் மதிப்பு மட்டும் ரூ3 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த சானியா மிர்ஸா தற்போது துபாயில் வசித்து வருகிறார். இவர்கள் திருமணம் செய்த பிறகு துபாயில் தான் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். தற்போது தனது மகன் இஷான் உடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரை தான் சோயப் மாலிக் அவ்வப்போது சென்று பார்த்து வருகிறார்.

Sania Mirza Sohaib Malik

பொதுவாக பிரபலங்கள் உள்ளூர் பயன்பாட்டிற்கு ஒரு கார், தொழில் அல்லது வியாபார ரீதியாக பயணிக்க ஒரு கார், குடும்பத்துடன் பயணிக்க ஒரு கார், பெரிய மனிதர்கள், அல்லது முக்கிய நிகழ்வுகளுக்கு செல்லும் போது பயணிக்க ஒரு கார் என பல கார்களை வைத்திருப்பார்கள். அப்படி தான் சானியா மிர்ஸாவும் கார்களை வைத்திருக்கிறார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலங்கள் காஸ்ட்லியான கார்களை வைத்திருக்கறிா்கள். அந்த வகையில் சானியா மிர்ஸாவிடமும் பல காஸ்ட்லியான கார்கள் இருக்கிறது. விவகாரத்திற்கு பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் செய்தி வெளியாகும் நிலையில் இந்த கார்கள் குறித்த பேச்சும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 17, 2025, 18:45 [IST]
English summary
Sania mirza car collection is talk of of the town know the reason behind
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X