மத்த மாநிலத்துகாரங்க வயிறு எரிய போகுது! தமிழக அரசு பஸ்களா இது! தனியார் பஸ் முதலாளிகளுக்கு ஆப்பு வெச்சுட்டாங்க!
தமிழகத்தில் தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் பலரின் முதல் சாய்ஸ் தனியார் சொகுசு ஆம்னி பஸ்களாகதான் உள்ளன. ஏனெனில் தனியார் சொகுசு ஆம்னி பஸ்கள்தான், பொதுமக்களுக்கு சௌகரியமான பயணத்தை வழங்குகின்றன. அரசு பஸ்களில் அந்த அளவிற்கு சௌகரியம் கிடைப்பதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
இதன் காரணமாக டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என தனியார் சொகுசு ஆம்னி பஸ்களிலேயே பொதுமக்கள் பயணம் செய்யும் சூழல் உள்ளது. ஆனால் கூடிய விரைவில் இந்த நிலைமை மாறவுள்ளது. ஏனெனில் தனியார் சொகுசு ஆம்னி பஸ்களை விஞ்சும் வகையிலான புதிய பஸ்களை தமிழக அரசின் எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC - State Express Transport Corporation) இயக்கவுள்ளது.

எஸ்இடிசி கடந்த 1975ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு எஸ்இடிசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எஸ்இடிசி தொடங்கப்பட்டு சுமார் 50 வருடங்கள் கடந்த பின்னரும் கூட, தற்போது வரை வால்வோ பஸ்கள் (Volvo Buses) இயக்கப்பட்டதில்லை.
ஆனால் வரலாற்றில் முதல் முறையாக தற்போது வால்வோ மல்டி ஆக்ஸில் பஸ்களை எஸ்இடிசி வாங்கியுள்ளது. வால்வோ நிறுவனத்திடம் இருந்து 20 மல்டி ஆக்ஸில் பஸ்களை தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகம் வாங்கவுள்ளது. இதில், முதற்கட்டமாக 8 பஸ்கள் தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த 8 புதிய பஸ்களும் வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. அதை தொடர்ந்து எஞ்சிய அனைத்து வால்வோ மல்டி ஆக்ஸில் பஸ்களும் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழகத்தை சேர்ந்த பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கும், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் மற்றும் தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த வால்வோ மல்டி ஆக்ஸில் பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் வாங்கியுள்ள புதிய வால்வோ மல்டி ஆக்ஸில் பஸ்களில் 51 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை செமி ஸ்லீப்பர் பஸ்கள் ஆகும். இந்த பஸ்களில் தீ விபத்து ஏற்பட்டால், பஸ்ஸின் மேற்கூரையில் இருந்தே தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வகையிலான வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிசிடிவி கேமராக்கள், இன்ஃபோடெயின்மெண்ட் திரை, செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள கூடிய வசதி மற்றும் ரீடிங் லைட் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஏர் சஸ்பென்ஸன், பஸ்ஸின் உயரத்தை 1 அடி வரை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் அம்சம் மற்றும் வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற வசதிகளையும், இந்த வால்வோ மல்டி ஆக்ஸில் பஸ்கள் கொண்டுள்ளன. அத்துடன் இந்த பஸ்ஸின் ஸ்டியரிங் வீலையும் டிரைவர் தங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.
மேலும் இந்த பஸ்ஸின் டிரைவர் இருக்கையின் உயரத்தையும் கூட அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். எனவே அரசு விரைவு போக்குவரத்து கழகம் வாங்கியுள்ள இந்த வால்வோ மல்டி ஆக்ஸில் பஸ்கள், தனியார் ஆம்னி சொகுசு பஸ்களுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தும் என நாம் எதிர்பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் இந்த வால்வோ மல்டி ஆக்ஸில் பஸ்களில், பயணிகளுக்கு சொகுசான பயணம் கிடைக்க போகிறது என்பது உறுதி. இது போன்ற அதிநவீன சொகுசு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்யவிருப்பது மகிழ்ச்சிதான். தமிழ்நாட்டின் பெருமையாக கருதப்படும் இந்த பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.
இதற்கு பயணிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தற்போது வாங்கியுள்ள ஒரு வால்வோ மல்டி ஆக்ஸில் பஸ்ஸின் மதிப்பு மட்டுமே 1.80 கோடி ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








