18 வருஷமா கார் கம்பெனி செயல்பட்டாலும், மக்கள் கண்டுக்க மாட்றாங்க! டாப்-10 இடத்திற்குள் கூட இடம்பிடிக்க முடியல!

ஸ்கோடா (Skoda) மற்றும் ஃபோக்ஸ்வாகன் (Volkswagen) நிறுவனங்கள் 2025 நவம்பர் மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் முறையே 8 மற்றும் 11வது இடங்களைப் பிடித்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரை காட்டிலும் விற்பனையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை சற்று சரிந்துள்ளது.

ஸ்கோடா 2024 நவம்பரை காட்டிலும் 90% வளர்ச்சி கண்டு கடந்த மாதத்தில் மொத்தம் 5,491 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பரில் விற்கப்பட்ட 2,886 ஸ்கோடா கார்களை விட 2,605 யூனிட்கள் அதிகம். அதேபோல், ஃபோக்ஸ்வாகன் 10% வளர்ச்சி பெற்று, கடந்த மாதம் 2024 நவம்பரை விட 3,342 கார்களை விற்றுள்ளது.

skoda and volkswagen november car sales

ஸ்கோடாவின் விற்பனையில், 'கைலாக்' (Kylaq) முக்கியப் பங்களிப்பைச் செய்துள்ளது. இருப்பினும், கடந்த அக்டோபரை காட்டிலும் விற்பனையில் கைலாக் 30% சரிவு கண்டுள்ளது; 2025 அக்டோபரில் 5,078 கைலாக் கார்கள் விற்கப்பட்ட நிலையில், நவம்பரில் இதன் விற்பனை 3,538 யூனிட்களாகக் குறைந்துள்ளது. 2024 நவம்பரின் போது கைலாக் விற்பனையில் இல்லை.

கைலாக் காருக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள ஸ்கோடா ஸ்லாவியா (Slavia) காரின் விற்பனை கடந்த நவம்பரில் 1,120 யூனிட்டுகளாகச் சரிந்துள்ளது. இது, 2024 நவம்பர் (1,131 யூனிட்கள்) மற்றும் 2025 அக்டோபர் (1,648 யூனிட்கள்) மாத விற்பனைகளுடன் ஒப்பிடுகையில் குறைவு ஆகும். இதற்கடுத்து 3வது இடத்தை பிடித்துள்ள ஸ்கோடா குஷாக் (Kushaq) காரின் விற்பனை 586 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது.

No Skoda Nov-25 Nov-24 Diff Growth % YoY Share % Nov 25
1 Kylaq 3,538 0 3,538 - 64.43
2 Slavia 1,120 1,131 -11 -0.97 20.40
3 Kushaq 586 1,524 -938 -61.55 10.67
4 Kodiaq 153 225 -72 -32.00 2.79
5 Octavia 94 0 94 - 1.71
6 Superb 0 6 -6 -100.00 0.00
- Total 5,491 2,886 2,605 90.26 100.00

இது 2024 நவம்பரில் விற்கப்பட்ட 1,542 குஷாக் கார்களுடன் ஒப்பிடுகையில் 62% மற்றும் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 52% குறைவாகும். இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் உள்ள ஸ்கோடா கோடியாக் (Kodiaq) காரும் 153 யூனிட்கள் விற்பனையுடன், 2024 நவம்பரை விட 32% மற்றும் அக்டோபரை விட 50% சரிவைக் கடந்த மாதத்தில் கண்டுள்ளது.

No Skoda Nov-25 Oct-25 Diff Growth % MoM Share % Oct 25
1 Kylaq 3,538 5,078 -1,540 -30.33 61.54
2 Slavia 1,120 1,648 -528 -32.04 19.97
3 Kushaq 586 1,219 -633 -51.93 14.77
4 Kodiaq 153 305 -152 -49.84 3.70
5 Octavia 94 2 92 4600.00 0.02
6 Superb 0 0 0 0.00 0.00
- Total 5,491 8,252 -2,761 -33.46 100.00

இருப்பினும், வழக்கத்தை விடவும் கடந்த மாதத்தில் அதிகமாக புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ் (Octavia RS) கார் கடந்த மாதம் 94 யூனிட்கள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது. 2025 அக்டோபரில் வெறும் 2 ஆக்டேவியா ஆர்.எஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த நிலையில், இது சுமார் 4600% மாதாந்திர வளர்ச்சியைக் காட்டுகிறது.

இந்தியாவில் 100 யூனிட்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்கோடா செடான் கார், வெளியான 20 நிமிடங்களுக்கு உள்ளாகவே விற்றுத் தீர்ந்தது. ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 2024 நவம்பரை காட்டிலும் கடந்த மாதம் 10% வளர்ச்சியைக் காட்டினாலும், 2025 அக்டோபரை விட 17% சரிவைச் சந்தித்துள்ளது. ஃபோக்ஸ்வாகனின் விற்பனையில் வழக்கம்போல் 'விர்டுஸ்' (Virtus) 2,225 யூனிட்கள் விற்பனை உடன் முன்னிலை வகித்துள்ளது.

skoda and volkswagen november car sales
No VW Nov-25 Nov-24 Diff Growth % YoY Share % Nov 25
1 Virtus 2,225 1,457 768 52.71 66.58
2 Taigun 1,077 1,497 -420 -28.06 32.23
3 Tiguan 38 79 -41 -51.90 1.14
4 Golf 2 0 2 - 0.06
- Total 3,342 3,033 309 10.19 100.00

இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விற்கப்பட்ட 1,457 விர்டுஸ் கார்களுடன் ஒப்பிடுகையில் 53% வளர்ச்சியாகும். எனினும், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 9% குறைந்துள்ளது. ஃபோக்ஸ்வாகனின் டைகுன் (Taigun), 2024 நவம்பரில் 1,497 மற்றும் 2025 அக்டோபரில் 1,560 யூனிட்கள் விற்பனையாகிய நிலையில், கடந்த மாதம் 1,077 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது.

No VW Nov-25 Oct-25 Diff Growth % MoM Share % Oct 25
1 Virtus 2,225 2,453 -228 -9.29 60.60
2 Taigun 1,077 1,560 -483 -30.96 38.54
3 Tiguan 38 33 5 15.15 0.82
4 Golf 2 2 0 0.00 0.05
- Total 3,342 4,048 -706 -17.44 100.00

இதற்கடுத்து கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ஃபோக்ஸ்வாகன் காராக 3வது இடத்தில் உள்ள டிகுவான் (Tiguan) வெறும் 38 யூனிட்கள் விற்பனையுடன், கடந்த அக்டோபர் மாதத்தின் 33 யூனிட்களை விட 15% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. என்றாலும், 2024 நவம்பரில் 79 டிகுவான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இவை மட்டுமன்றி, ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் கார் 2025 நவம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா 2 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்கள் தங்களது ஸ்லாவியா, குஷாக், விர்டுஸ் மற்றும் டைகுன் கார்களின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களை (ஃபேஸ்லிஃப்ட்) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த நான்கு கார்களும் தற்போது சோதனை ஓட்டங்களில் உள்ளன. அவை பலமுறை பொதுவெளியில் காணப்பட்டுள்ளன. ஆதலால், 2026ஆம் ஆண்டில் இவை அறிமுகப்படுத்தப்பட்டு ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 16, 2025, 21:40 [IST]
English summary
Skoda and volkswagen cars wise sales report of november 2025 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+