கார் வாங்க செப்.22 வரை காத்திருக்கனும்னு அவசியம் இல்ல... ஜிஎஸ்டி விலை குறைப்பை விட இது நல்ல மேட்டரா இருக்கே!

ஜிஎஸ்டி (GST)-இல் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதை அடுத்து, ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் அதன் கார்களின் விலைகளை குறைக்க போவதாக அறிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், ஸ்கோடா கார்களுக்கு வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு குறுகிய கால சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மத்திய அரசாங்கம் இந்தியாவில் ஜிஎஸ்டியில் புதியதாக மாற்றங்களை செய்து சமீபத்தில் வெளியிட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இதன்படி, விலை குறைவான 4-சக்கர வாகனங்கள் மற்றும் 2-சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலைகள் வெகுவாக குறையும் சூழல் உருவாகி உள்ளது.

skoda cars price cut

கார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களது கார்களின் விலைகளை குறைக்க போவதாக அறிவித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் அதன் கார்களின் விலைகளை குறைக்க போவதாக அறிவித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மற்ற கார் நிறுவனங்களை போன்று ஸ்கோடாவும் அதன் கார்களின் விலைகளை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது என இதனை சாதாரணமாக கடந்துவிட முடியாது.

ஏனெனில், ஜிஎஸ்டி மாற்றத்தின்படி கார்கள் மற்றும் 2-சக்கர வாகனங்களின் விலைகள் வருகிற செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்தே அமலுக்குவர உள்ளன. ஏனெனில், ஜிஎஸ்டியில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை செப்.22இல் இருந்துதான் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இதனாலேயே கார்களில் விலை குறைப்பை அறிவித்துள்ள கார் நிறுவனங்கள் இந்த விலை குறைப்புகள் செப்.22 முதல் அமலுக்கு கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளன.

skoda cars price cut

ஸ்கோடாவும் அவ்வாறுதான் அறிவித்துள்ளது என்றாலும், அதுவரையில் குறுகிய கால சலுகைகளை பண்டிகை கால சலுகைகள் என்கிற பெயரில் அறிவித்துள்ளது. செப்.22 முதல் ஜிஎஸ்டி எதிரொலியால் கார்களின் விலைகள் குறைக்கப்பட உள்ளதால், அதுவரையில் அதாவது செப்.21ஆம் தேதி வரையில் ஸ்கோடாவின் இந்த சலுகைகள் அமலில் இருக்கும். இதனால், இப்போதில் இருந்தே ஸ்கோடா கார்களை குறைந்த விலையில் வாங்கலாம்.

முதலில் ஸ்கோடா குஷாக் (Kushaq) காரை பற்றி பார்ப்போம். ஸ்கோடாவின் காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக காரான குஷாக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) செப்.22க்கு பிறகு ஜிஎஸ்டி மாற்றத்தினால் ரூ.66 வரையில் குறைத்துக் கொள்ளப்பட உள்ளது. ஆனால், செப்.22 வரையில் காத்திருக்காமல் இப்போதே குஷாக் காரை புக் (Book) செய்வது நல்லது.

skoda cars price cut

ஏனெனில், செப்.22க்கு பிறகான விலை குறைப்பை விட செப்.21 வரையிலான சலுகையின்படி குஷாக் காரை சுமார் ரூ.2.5 லட்சம் வரையில் குறைவான விலையில் வாங்க முடியும். குஷாக்கை காட்டிலும் அளவில் சிறியதான எஸ்யூவி காராக ஸ்கோடா சமீபத்தில் அறிமுகம் செய்த கைலாக் (Kylaq) காரின் விலைகள் செப்.22க்கு பிறகு ரூ.1.19 லட்சம் வரையில் குறைக்கப்பட உள்ளன.

மற்றப்படி, கைலாக் காருக்கு செப்.21 வரையிலான குறுகிய கால சலுகைகள் அறிவிக்கப்பட்டதாக எந்த விபரமும் இல்லை. ஸ்கோடாவின் மற்ற கார்களான ஸ்லாவியா மற்றும் கோடியாக் கார்களின் விலைகள் செப்.22க்கு பிறகு முறையே ரூ.63 ஆயிரம் மற்றும் ரூ.3.3 லட்சம் வரையில் குறைக்கப்பட உள்ளன. அதற்கு முன்பாக ஸ்லாவியா காருக்கு ரூ.1.2 லட்சம் வரையிலும், கோடியாக் காருக்கு ரூ.2.5 லட்சம் வரையிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Model GST Benefits (Up to INR) Additional Benefits (Up to INR)
Kushaq ₹66,000 ₹2.5 Lakh
Slavia ₹63,000 ₹1.2 Lakh
Kodiaq ₹3.3 Lakh ₹2.5 Lakh
Kylaq ₹1.19 Lakh -
skoda cars price cut

டிரைவ்ஸ்பார்க் கருத்து: செப்.22க்கு பிறகு கொண்டுவரப்பட உள்ள விலை குறைப்புக்கு முன்னதாக கார்களுக்கு குறுகிய கால சலுகைகளை ஸ்கோடா அறிவித்து இருப்பது சிறந்த வியாபார யுக்தி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், எப்படியிருந்தாலும் செப்.22க்கு பிறகே பலரும் தாங்கள் விரும்பும் காரை வாங்க முயற்சிப்பர். ஆனால், அதற்கு முன்னதாகவே சலுகைகளை அறிவித்து இருப்பது மற்ற நிறுவனங்களின் கார்களை வாங்க யோசித்து வருபவர்களை கூட ஸ்கோடா பக்கம் இழுக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 8, 2025, 10:37 [IST]
English summary
Skoda announces price cut for its cars in india following 2025 gst rate cut
மேலும்... #skoda #skoda kushaq #Skoda Kylaq #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X