ரொம்ப உஷாரா பிரபல நடிகரை வளைச்சி போட்ட கார் கம்பெனி! இது நம்ப லிஸ்ட்டிலேயே இல்லையே

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), செக் குடியரசு நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் சமீபத்தில்தான் கைலாக் (Kylaq) என்கிற புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்து கஸ்டமர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அடுத்த அதிரடி நடவடிக்கையாக பிரபல நடிகர் ஒருவரை தனது நிறுவனத்தின் பிராண்ட் தூதராக ஸ்கோடா நியமித்துள்ளது. யார் அந்த நடிகர் என்பதை பற்றியும், இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் அடுத்த கட்ட திட்டங்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

எந்தவொரு கார்ப்பிரேட் நிறுவனத்திற்கும் விளம்பரம் என்பது அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, பொது மக்களிடம் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யும் கார் நிறுவனங்களுக்கு அவை மேற்கொள்ளும் விளம்பரங்கள் தான் அவற்றின் முகங்களாக அமைகின்றன. இதனாலேயே பிராண்ட் தூதராக மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான நபரை நியமிப்பது அவசியமாகும்.

skoda auto appoints brand ambassador

இந்த விஷயத்தில் ஸ்கோடா நிறுவனம் மிகவும் தெளிவாக நடந்துக் கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் தூதராக தற்போது நியமிக்கப்பட்டு இருப்பது, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh) ஆவார். இதனை ஸ்கோடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் ரன்வீர் சிங்கை பற்றி உங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏனெனில், இவர் இந்தி மொழி திரைப்படங்களை தவிர்த்து வேறு எந்த மொழியிலும் நடித்தது கிடையாது. இதனாலேயே குறிப்பாக வட இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக ரன்வீர் சிங் விளங்குகிறார். 39 வயதான ரன்வீர் சிங் நீண்ட வருடங்களாக சினிமா துறையில் இருந்தாலும், இதுவரையில் கிட்டத்தட்ட 30 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

skoda auto appoints brand ambassador

ஏனெனில், திரைப்பட கதைகளை மிகவும் கவனத்துடன் நேரம் எடுத்துக் கொண்டு தேர்வு செய்யக்கூடியவராக நடிகர் ரன்வீர் சிங் விளங்குகிறார். நாடு முழுவதும் பிரபலமான நடிகை தீபிகா படுகோனேவின் கணவர் தான் நடிகர் ரன்வீர் சிங் ஆவார். இதனாலேயே இத்தகையவரை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமித்து இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை.

ஏற்கனவே கூறியதுபோல், ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார் கைலாக் ஆகும். 2021ஆம் ஆண்டில் குஷாக் (Kushaq) காரை எந்த அளவிற்கு பரபரப்பாக அறிமுகம் செய்ததோ அதே அளவிற்கு கைலாக் காரின் மீது ஸ்கோடா நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளது.

skoda auto appoints brand ambassador

அதற்கேற்ப கைலாக் காருக்கு இதுவரையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்துள்ளன. மேலும், இந்த காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளும் சமீபத்தில் துவங்கப்பட்டன. ஸ்கோடா நிறுவனத்தின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான கைலாக், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா கார்களின் விற்பனை ஆனது இந்தியாவில் எப்போதுமே ஏற்ற, இறக்கமாகவே இருந்துள்ளது. இதனை சீர்ப்படுத்த ரன்வீர் சிங் போன்ற பிரபலமான நடிகரின் முகம் தேவைப்படுகிறது. ஆதலால், இதன் பின் ஸ்கோடா கார்கள் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2025, 19:46 [IST]
English summary
Skoda auto appoints ranveer singh as brand ambassador
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X