ஆயிரக்கணக்கான பேர் ஏற்கனவே இந்த காரை வரிசையா வாங்கிட்டு வராங்க! கார் கம்பெனி செய்த ஒரு சிறிய மாற்றம்
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களாக ஸ்லாவியா (Slavia) மற்றும் குஷாக் (Kushaq) விளங்குகின்றன. இதனாலேயே இவற்றை முடிந்தவரையில் அப்டேட் செய்ய ஸ்கோடா நிறுவனம் முயற்சிக்கிறது. அந்த வகையில், புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் கார்கள் அப்டேட் செய்யப்பட்டு தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
இந்திய சந்தைக்கு ஏற்ற கார்களை ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வருகின்றன. அந்த வரிசையில், சில வருடங்களுக்கு முன் இவை இரண்டும் உருவாக்கி அறிமுகம் செய்த கார்கள் தான் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகும். ஸ்லாவியா ஆனது ஸ்கோடாவின் செடான் (Sedan) ரக கார் ஆகும்.

அதுவே, குஷாக் ஆனது ஸ்கோடாவின் எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். இதேபோல், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்தும் ஒரு செடான் மற்றும் எஸ்யூவி கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தில் இருந்து தற்சமயம் அதிகம் விற்பனையாகும் காராக ஸ்லாவியா விளங்குகிறது. குஷாக்கின் விற்பனையும் சிறப்பானதாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், அவற்றின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் பொருட்டு இந்த ஸ்கோடா கார்களின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அப்டேட்களாக, ஸ்லாவியா மற்றும் குஷாக் கார்களின் தோற்றத்தில் மட்டுமே சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர்த்து, கார்களின் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.
புதிய 2025 ஸ்கோடா ஸ்லாவியா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.34 லட்சத்தில் இருந்தும், 2025 குஷாக் காரின் விலைகள் ரூ.10.99 லட்சத்தில் இருந்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், 2025 குஷாக் கார் ஆனது கிளாசிக், ஆனிக்ஸ், சிக்னெச்சர், ஸ்போர்ட்லைன், மோன்டே கார்லோ மற்றும் பிரெஸ்டீஜ் என 6 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், ஆனிக்ஸ் வேரியண்ட்டில் 16-இன்ச்சில் அலாய் சக்கரங்களும், சிக்னெச்சர் வேரியண்ட்டில் எலக்ட்ரிக் சன்ரூஃப், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், ஆட்டோ-டிம்மிங் IRVM மற்றும் பெரிய அளவிலான 17-இன்ச் அலாய் சக்கரங்கள் என உயர் தரத்திலான தொழிற்நுட்ப வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 2025 குஷாக் காரை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம்.
மறுப்பக்கம், 2025 ஸ்லாவியா கார் ஆனது கிளாசிக், சிக்னெச்சர், ஸ்போர்ட்லைன், மோண்டே கார்லோ மற்றும் பிரெஸ்டீஜ் என 5 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், சிக்னெச்சர் வேரியண்ட்டில் இருந்தே எல்இடி டிஆர்எல்-கள் உடன் எல்இடி ஹெட்லைட்கள், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் என பிரீமியம் தரத்திலான வசதிகளை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்கோடா கார்களாக உள்ள இவற்றை மக்கள் மத்தியில் எப்போதும் புத்துணர்ச்சியானதாகவே வைத்திருக்க இந்த அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் வரும் மாதங்களில் ஸ்கோடா கார்களின் விற்பனை ஆனது மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








