25 வருஷமா இருக்குறாங்கனு தான் பேரு... பலர் அறிந்திடாத கார் கம்பெனி! மக்களை கவர வேற விதமா திட்டம் போட்டுட்டாங்க

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), உலகின் மிக பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்று. எத்தனை வருடங்கள் பழமையானது என கேட்டால், சுமார் 130 வருடங்கள் ஸ்கோடா ஆட்டோ பழமையானது ஆகும். அதாவது, 19ஆம் நூற்றாண்டில் இருந்தே ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் செயல்பட துவங்கிவிட்டது.

இந்தியாவில் இந்த நிறுவனம் கடந்த 25 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் 25 வருடங்களை தற்போதுதான் ஸ்கோடா நிறுவனம் கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாகவே சில புதிய ஸ்பெஷல் எடிசன் (Special Edition) கார்களை ஸ்கோடா நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

skoda auto limited edition

ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யும் குஷாக் (Kushaq), ஸ்லாவியா (Slavia), கைலாக் (Kylaq) உள்ளிட்ட மூன்று கார்களில் புதியதாக ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்பெஷல் எடிசன் என சொல்வதை காட்டிலும் லிமிடெட் எடிசன் (Limited Edition) என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி குறுகிய காலத்திற்கு மட்டுமே மேற்கூறப்பட்ட ஸ்கோடா கார்களில் லிமிடெட் எடிசன்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. வழக்கமான ஸ்கோடா கார்களில் இருந்து வேறுப்பட்ட தோற்றம், கூடுதல் பிரீமியம் தரத்திலான வசதிகள் மற்றும் ஆக்ஸஸரீ (Accessories) தொகுப்புகள் உடன் இந்த புதிய லிமிடெட் எடிசன்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களில் ஏற்கனவே மோண்டே கார்லோ (Monte Carlo) என்கிற டாப் வேரியண்ட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் புதிய லிமிடெட் எடிசன்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதேநேரம், ஸ்கோடாவின் சமீபத்திய அறிமுகமான கைலாக் காரில் அதன் பிரெஸ்டீஜ் மற்றும் சிக்னெச்சர்+ வேரியண்ட்களின் அடிப்படையில் புதிய லிமிடெட் எடிசன் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஸ்கோடா அறிமுகம் செய்துள்ள இந்த புதிய லிமிடெட் எடிசன்கள் அனைத்திலும் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் 25 ஆண்டுகளை நினைவுக்கூறும் விதமாக '25ஆம் ஆண்டு நிறைவு' முத்திரைகள் காரை சுற்றிலும் வழங்கப்பட்டு உள்ளன. அத்துடன், காரின் வெளிப்பக்கத்தில் கார்னிஷ்கள் (Garnishes) மேம்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல், காருக்கு உள்ளேயும் 360-டிகிரி கேமரா, பெடில் விளக்குகள், அண்டர்பாடி விளக்குகள் மற்றும் இன்னும் சில அப்டேட்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

ஸ்கோடா குஷாக் ஆனிவர்சரி எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.16.39 லட்சத்தில் இருந்து ரூ.19.09 லட்சம் வரையிலும், ஸ்லாவியா ஆனிவர்சரி எடிசனின் விலைகள் ரூ.15.63 லட்சத்தில் இருந்து ரூ.18.33 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும் கைலாக் ஆனிவர்சரி எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை சிக்னெச்சர்+ வேரியண்ட்டில் ரூ.11.25 லட்சமாகவும், பிரெஸ்டீஜ் வேரியண்ட்டில் ரூ.12.89 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் சமீப கால வளர்ச்சி கவனிக்கத்தக்கதாக உள்ளது. இருப்பினும், இந்திய மார்க்கெட்டிற்குள் ஸ்கோடா நுழைந்து அதற்குள் 25 வருடங்கள் கடந்துவிட்டன என நினைக்கும்போது ஆச்சிரியமாக உள்ளது. அதாவது, கால் நூற்றாண்டை இந்தியாவில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் கடந்துள்ளது. இதனை நிச்சயமாக கொண்டாடியே ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 12, 2025, 12:00 [IST]
English summary
Skoda auto launches new limited edition for kushaq slavia kylaq
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+