இந்தியாவில் எங்கே பார்த்தாலும் ஓடும் புது ஸ்கோடா கார்... மே மாதத்தில் மட்டும் எத்தனை பேர் வாங்கி இருக்காங்க?

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India) நிறுவனத்தின் விற்பனை மாதத்திற்கு மாதம் வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. இதனை சமாளிக்க சமீபத்தில் ஸ்கோடாவில் கைலாக் (Kylaq) கார் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், ஸ்கோடா கார்கள் விற்பனையும் சற்று சரிவை சந்தித்து வருகிறது. அதேபோல், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்கள் விற்பனையும் கணிசமாக குறைந்துக் கொண்டே வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்கோடா ஆட்டோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் கூட்டணியில் இருப்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவை எப்படி கூட்டணி சேர்ந்தன? இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவிற்காக உருவாக்கிய கார்கள் என்ன? என்பதை பற்றி எல்லாம் ஏற்கனவே பலமுறை பார்த்துள்ளோம். இந்த தொகுப்பில் இந்த கார் நிறுவனங்களின் கடந்த மே மாத விற்பனை நிலவரத்தை பற்றி பார்ப்போம்.

skoda auto volkswagen car sales

முதலில் ஸ்கோடாவை பற்றி பார்ப்போம். ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து கடந்த மே மாதத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 740 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2024 மே மாதத்தில் வெறும் 2 ஆயிரத்து 884 கார்களை மட்டுமே ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதாவது, தற்போது விற்பனை செய்யப்பட்டு இருப்பவைகளில் பாதி எண்ணிக்கையிலான கார்கள் கூட விற்கப்படவில்லை.

இதற்கு முக்கியமான காரணம், ஸ்கோடாவில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கைலாக் (Kylaq) கார் ஆகும். ஏனெனில், மொத்தம் விற்பனை செய்யப்பட்ட 6 ஆயிரத்து 740 கார்களில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கார்கள் கைலாக் ஆகும். இருப்பினும், கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்பது கிடையாது.

skoda auto volkswagen car sales

ஏனெனில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 7 ஆயிரத்து 302 கார்களை ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் சரி, மே மாதத்திலும் சரி அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா காராக முதலிடத்தை பிடித்துவரும் லேட்டஸ்ட் அறிமுகமான கைலாக் கடந்த மே மாதத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 949 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

அதுவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் 5,364 கைலாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கைலாக்கிற்கு அடுத்து 2வது மற்றும் 3வது இடங்களில் ஸ்லாவியா மற்றும் குஷாக் உள்ளன. இவற்றின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 937 மற்றும் 644 ஆகும். இவை இரண்டின் விற்பனையும் 2024 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் முறையே 39% மற்றும் 44% குறைந்துள்ளது.

4வது இடத்தில் உள்ள கோடியாக் காரின் விற்பனை கடந்த மாதத்தில் ஓரளவிற்கு அதிகரித்து 208 யூனிட்களாக பதிவாகி உள்ளது. இவை இல்லாமல், இரு ஸ்கோடா சூப்பர்ப் கார்களும் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மறுப்பக்கம், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் 2 ஆயிரத்து 848 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

skoda auto volkswagen car sales

அதுவே, 2024ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் 3 ஆயிரத்து 273 கார்களை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ஃபோக்ஸ்வேகன் கார்கள் விற்பனை ஆனது 12.99%, அதாவது 425 யூனிட்கள் குறைந்துள்ளது. அதேபோல், கடந்த 2025 ஏப்ரல் மாதத்திலும் மே மாதத்தை காட்டிலும் 3 கார்கள் அதிகமாக 2 ஆயிரத்து 851 ஃபோக்ஸ்வேகன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் 1,707 விர்டுஸ் கார்கள், 1,126 டைகுன் கார்கள் மற்றும் 15 டிகுவான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகன் கார்கள் விற்பனை ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டு வருகிறது என்றாலும், ஸ்கோடா கார்கள் விற்பனை ஆனது புதிய கைலாக் காரினால் தான் அதிகரித்து வருகிறது. அதாவது, எப்போது கைலாக் காரின் விற்பனை குறைய துவங்குகிறதோ அப்போதே ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனையும் குறைய துவங்கிவிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 17, 2025, 11:40 [IST]
English summary
Skoda auto volkswagen car sales report of may 2025 check all details here
மேலும்... #skoda #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X