என்ன முயற்சி பண்ணாலும் எதுவும் நடக்க மாட்டீங்குதே! இந்தியாவில் கார் விற்க போராடும் ஐரோப்பிய நிறுவனங்கள்

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India) என்பது ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் என இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். ஜெர்மனியை சேர்ந்த பிரபலமான ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் கீழ் செயல்படும் இந்த கூட்டணி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் பல்வேறு விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை கடந்த 2025 ஜனவரி மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

ஸ்கோடாவும் சரி, ஃபோக்ஸ்வேகனும் சரி இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகின்றன. இதன் காரணமாகவே, இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட ஆரம்பித்தன. அதன் மூலமாக, இரு நிறுவனங்களுக்கும் கார்களை உற்பத்தி செய்வதில் செலவு கணிசமாக குறைந்தது.

skoda auto volkswagen india sales

ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து தற்சமயம் 5 விதமான கார் மாடல்களும், ஃபோக்ஸ்வேகனில் இருந்து 3 விதமான கார் மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்கோடாவில் இருந்து விற்பனை செய்யப்படும் 5 கார்கள் மொத்தமாக கடந்த 2025 ஜனவரி மாதத்தில் 4,133 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தை காட்டிலும் சுமார் 73.87% அதிகமாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் 2 ஆயிரத்து 377 கார்களை மட்டுமே ஸ்கோடா விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் 4 ஆயிரத்து 554 கார்களை ஸ்கோடா விற்பனை செய்திருந்தது. ஸ்கோடாவில் இருந்து கடந்த ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார், ஸ்லாவியா (Slavia) ஆகும்.

skoda auto volkswagen india sales

ஸ்கோடாவின் செடான் ரக காரான ஸ்லாவியா கடந்த மாதத்தில் மொத்தம் 1,510 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 ஜனவரியில் 1,242 ஸ்லாவியா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டாலும், டிசம்பரில் 1,894 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்லாவியாவுக்கு அடுத்து 2வது இடத்தில் குஷாக் உள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட குஷாக் கார்களின் எண்ணிக்கை 1,371 ஆகும். 2024 டிசம்பரில் 2,465 குஷாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 3வது இடத்தில் லேட்டஸ்ட் ஸ்கோடா காரான கைலாக் 1,242 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இவை இல்லாமல், 10 கோடியாக் கார்களையும் கடந்த மாதத்தில் ஸ்கோடா விற்பனை செய்துள்ளது.

skoda auto volkswagen india sales

ஃபோக்ஸ்வேகனை பொறுத்தவரையில், இந்த நிறுவனம் கடந்த ஜனவரியில் 3,344 கார்களை விற்பனை செய்துள்ளது. அதுவே, 2024 டிசம்பரில் 4,787 ஃபோக்ஸ்வேகன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த மாதத்தில் 1,795 விர்டுஸ் கார்களும், 1,548 டைகுன் கார்களும், ஒரேயொரு டிகுவான் காரும் ஃபோக்ஸ்வேகனில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் இவை இரண்டில் இருந்தும் விலைமிக்க கார்கள் அதிகமாக இந்தியாவில் விற்பனையாகுவதில்லை. ஸ்கோடாவில் இருந்து விற்பனை செய்யப்படும் சூப்பர்ப் கார் கடந்த ஜனவரியில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை. இருப்பினும், கைலாக் காரின் விற்பனை ஸ்கோடா நிறுவனத்துக்கு வரும் மாதங்களில் பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 12, 2025, 23:49 [IST]
English summary
Skoda auto volkswagen india cars sales report 2025 january
மேலும்... #skoda #volkswagen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X