தீபாவளிக்கு எல்லாரும் இந்த ஸ்கோடா காரை தான் வாங்குறாங்க... ஃபோக்ஸ்வேகன் ஷோரூம்களில் காத்து வாங்குது!
ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) 2025 செப்டம்பர் மாதத்தை வலுவான நிலையில் நிறைவு செய்தது. புதிய ஸ்கோடா கைலாக் எஸ்யூவி காரின் வெற்றி மற்றும் ஜிஎஸ்டி 2.0 வரித் திருத்தத்திற்குப் பிந்தைய விலைக் குறைப்புகள் ஆகியவற்றால் விற்பனை அதிகரித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் வரிசையில் 8-வது இடத்திற்கு ஸ்கோடா முன்னேறியுள்ளது.
ஸ்கோடா கைலாக், பிரீமியம் தரத்திலான குடும்ப எஸ்யூவியாக இந்திய வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறப்பான தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் உயர் பாதுகாப்புத் தரங்கள் உடன் கைலாக் மக்களின் கவனத்தை சந்தையில் ஈர்த்துள்ளது. இதன் மூலமாக, ஸ்கோடாவின் சந்தைப் பங்கு 1.8% ஆக உயர்ந்துள்ளது.

அதாவது, கடந்த மாதத்தில் கார் வாங்குபவர்களில் 100இல் 1.8 பேர் ஸ்கோடா காரை தேர்வு செய்துள்ளனர். பெரும்பாலான ஸ்கோடா கார்களுக்கான தேவை மாதந்தோறும் அதிகரித்து வருவது இதற்கு ஒரு காரணம் ஆகும். இதற்கு மாறாக, ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) 11-வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
ஃபோக்ஸ்வேகனின் கடந்த மாத சந்தைப் பங்கு 0.7% ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபலமான விர்டஸ் செடான் கார் கூட 2024 செப்டம்பர் மற்றும் 2025 ஆகஸ்ட் மாதங்களை காட்டிலும் கடந்த 2025 செப்டம்பரில் விற்பனையில் சரிவைக் கண்டுள்ளது. ஸ்கோடா மொத்தம் 6,636 கார்களை கடந்த 2025 செப்டம்பரில் விற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இது 2024 செப்டம்பரில் விற்கப்பட்ட 3,301 ஸ்கோடா கார்களுடன் ஒப்பிடும்போது 101% அதிகரிப்பு ஆகும். 2025 ஆகஸ்ட்டில் விற்கப்பட்ட 4,971 ஸ்கோடா கார்களுடன் ஒப்பிடும்போதும் இது 33% அதிகரிப்பு ஆகும். கைலாக் தொடர்ந்து சீரான வேகத்துடன் கடந்த மாதத்தில் 4,398 யூனிட்கள் விற்பனையாகி, 2025 ஆகஸ்ட்டை விட விற்பனையில் 42% அதிகரிப்பைக் கண்டுள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் ஸ்கோடா பிராண்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக கைலாக் மாறியுள்ளது. 2024 நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, கைலாக் ஸ்கோடாவின் எஸ்யூவி கார்கள் வரிசையை புத்துயிர் பெற உதவியுள்ளது. இதற்கடுத்து, ஸ்கோடா ஸ்லாவியா செடான் 1,339 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது 2024 செப்டம்பரை விட 4% குறைவு என்றாலும், 2025 ஆகஸ்ட்டை விட 33% அதிகரிப்புடன் நிலையான செடான் தேவையை உறுதிப்படுத்தியுள்ளது.

| No | Skoda | Sep-25 | Sep-24 | Diff | Growth % YoY | Share % Sep 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Kylaq | 4,398 | - | 4,398 | - | 66.27 |
| 2 | Slavia | 1,339 | 1,391 | -52 | -3.74 | 20.18 |
| 3 | Kushaq | 769 | 1,767 | -998 | -56.48 | 11.59 |
| 4 | Kodiaq | 130 | 140 | -10 | -7.14 | 1.96 |
| 5 | Superb | 0 | 3 | -3 | -100.00 | 0.00 |
| - | Total | 6,636 | 3,301 | 3,335 | 101.03 | 100.00 |
| No | Skoda | Sep-25 | Aug-25 | Diff | Growth % MoM | Share % Aug 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Kylaq | 4,398 | 3,099 | 1,299 | 41.92 | 62.34 |
| 2 | Slavia | 1,339 | 1,008 | 331 | 32.84 | 20.28 |
| 3 | Kushaq | 769 | 789 | -20 | -2.53 | 15.87 |
| 4 | Kodiaq | 130 | 75 | 55 | 73.33 | 1.51 |
| 5 | Superb | 0 | 0 | 0 | - | 0.00 |
| - | Total | 6,636 | 4,971 | 1,665 | 33.49 | 100.00 |
இவை இல்லாமல், கடந்த மாதத்தில் 769 குஷாக் கார்கள், 130 கோடியாக் கார்களையும் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மறுப்பக்கம், ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் 2025 செப்டம்பரில் 2,780 கார்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 3,394 ஃபோக்ஸ்வேகன் கார் விற்பனை உடன் ஒப்பிடும்போது 18% குறைவு ஆகும்.
இருப்பினும், கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட 2,718 ஃபோக்ஸ்வேகன் கார்கள் உடன் ஒப்பிடும்போது இது 2% அதிகரிப்பு ஆகும். விர்டுஸ் மாடல் ஃபோக்ஸ்வேகன் பட்டியலில் 1,648 யூனிட்கள் விற்பனை உடன் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் இது 2024 செப்டம்பரில் ஃபோக்ஸ்வேகன் விற்ற 1,697 விர்டுஸ் கார்களில் இருந்து சற்று குறைவு ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் 1,114 யூனிட்கள் விற்பனை உடன் பின்தங்கியுள்ளது. இது 2024 செப்டம்பரை விட 31% சரிவு என்றாலும், 2025 ஆகஸ்ட்டை விட 11% அதிகம் ஆகும். ஃபோக்ஸ்வேகனின் விலைமிக்க பெரிய கார் மாடல்கள் இன்னமும் விற்பனையில் தடுமாற்றத்தை கண்டு வருகின்றன. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் 17 யூனிட்களும், கோல்ஃப் வெறும் ஒரு யூனிட்டும் மட்டுமே கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
| No | VW | Sep-25 | Sep-24 | Diff | Growth % YoY | Share % Sep 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Virtus | 1,648 | 1,697 | -49 | -2.89 | 59.28 |
| 2 | Taigun | 1,114 | 1,611 | -497 | -30.85 | 40.07 |
| 3 | Tiguan | 17 | 86 | -69 | -80.23 | 0.61 |
| 4 | Golf | 1 | 0 | 1 | - | 0.04 |
| - | Total | 2,780 | 3,394 | -614 | -18.09 | 100.00 |
| No | VW | Sep-25 | Aug-25 | Diff | Growth % MoM | Share % Aug 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Virtus | 1,648 | 1,674 | -26 | -1.55 | 61.57 |
| 2 | Taigun | 1,114 | 1,001 | 113 | 11.29 | 36.82 |
| 3 | Tiguan | 17 | 8 | 9 | 112.50 | 0.29 |
| 4 | Golf | 1 | 36 | -35 | -97.22 | 1.32 |
| - | Total | 2,780 | 2,719 | 61 | 2.24 | 100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎஸ்டி 2.0 திருத்தங்கள் காரணமாக ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், கோல்ஃப் ஜிடிஐ மற்றும் டிகுவான் ஆர்-லைன் போன்ற வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்கள் உட்பட, ஒட்டுமொத்த ஃபோக்ஸ்வேகன் கார்களின் தேவையும் மந்தமாகவே உள்ளது. இருப்பினும் மறுப்பக்கம், ஸ்கோடா கார்களுக்கு ஓரளவிற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









