இனி இந்தியாவிற்கு வெளிநாட்டு கார்கள் கிடையாது.. அந்தர் பல்டி அடித்த பிரபல நிறுவனம்!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஸ்கோடா (Skoda)-வும் ஒன்று ஆகும். இந்தியாவில் கார் உற்பத்தி ஆலையை அமைத்து செயல்படும் நிறுவனங்களில் ஒன்றாகவும் அது இருக்கின்றது. என்னதான் இங்கு பலவகை கார் மாடல்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்தாலும், இந்தியர்களுக்காக குறிப்பிட்ட சில கார் மாடல்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து அது இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இனி இந்தியாவிற்காக வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை என ஸ்கோடா அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக,பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் இறக்குமதியை முழுமையாக ரத்து செய்திருப்பதாக அது கூறப்படுகின்றது. மின்சார வாகனங்கள் விஷயத்திலும் இதே மன நிலையையே நிறுவனம் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மின்சார வாகனங்களுக்கு அரசு வழங்கும் வரி சலுகையை உள்ளிட்ட பிற சலுகையைப் பொருத்தே இந்த விஷயத்தில் அது இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் என தெரிகின்றது.

Skoda import car plans cancelled

நிறுவனத்தின் இந்த மனநிலையால், ஸ்கோடா நிறுவனம் அப்போ இந்தியாவில் தன்னுடைய பிரீமியம் மின்சார கார்களை விற்பனைக்குக் கொண்டு வராதோ என கேட்கச் செய்திருக்கின்றது. இந்த கேள்விக்கான பதிலும் இப்போது கிடைத்திருக்கின்றது. அந்த நிறுவனம் தன்னுடைய மின்சார கார்களை இந்தியாவிலேயே வைத்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கின்றது.

இவ்வாறு ஸ்கோடா நிறுவனம் செய்யும் எனில் நாட்டில் அதன் மின்சார கார்கள் கூடுதலாக கம்மியான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்ற நிலை உருவாகும். ஆகையால், ஸ்கோடாவின் இந்த திட்டம் இந்தியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற தொடங்கி இருக்கின்றது. அதேநேரத்தில், அந்த நிறுவனம் முழுமையாக கட்டியமைக்கப்பட்ட வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வராது என்கிற தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Skoda india pauses imported car plans

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. இந்தியாவில் தயாரிக்கப்பட முடியாத, அதேவேளையில், சிறிய அளவு மட்டுமே சந்தையைக் கொண்ட வாகனங்களை அது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, விரைவில் பிரீமியம் மாடல்களான சூப்பர்ப் (Superb), ஆக்டேவியா (Octavia), ஆக்டேவியா ஆர்எஸ் (Octavia RS) மற்றும் கோடியாக் (Kodiaq) ஆகிய மாடல்களையே சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது.

இப்போது இவற்றின் வருகையிலேயே தற்போது சந்தேகம் எழும்பியிருக்கின்றது. இப்போதைக்குக் கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் கஸ்டம்ஸ் டியூட்டியைப் பொருத்தே இவற்றின் வருகையில் முக்கிய முடிவை நிறுவனம் எடுக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் இந்தியாவில் மேலே பார்த்த கார் மாடல்களை மட்டுமல்ல என்யாக் கார் மாடலின் இ-வெர்ஷனை சீக்கிரமே நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த ஆண்டு முடிவடைவதற்குள்ளாகவே என்யாக் இவி விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி ஷோ-வில் வைத்தே இந்த வாகனத்தை முதல் முறையாக அது காட்சிப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போது நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவலின் வாயிலாக இந்த காரின் உற்பத்தியை அது சீக்கிரமே தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிக மிக அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய ஓர் எலெக்ட்ரிக் மின்சார காரே என்யாக் இவி ஆகும். 282 பிஎச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டாரைக் கொண்டே இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், ஓர் முழு சார்ஜில் 500 கிமீ ரேஞ்சை வழங்கக் கூடிய 82 kWh பேட்டரி பேக்கும் என்யாக் இவியில் எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனம் என்யாக் இவி-யை மட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல கார்களை இந்தியாவிலேயே வரும் நாட்களில் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் இந்தியாவிற்கானதாக மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் அவை ஏற்றுமதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 20, 2025, 17:17 [IST]
English summary
Skoda india halts plans to import cars and electric vehicles due to customs duty uncertainty
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+