பெட்ரோல் கார் தானே என்று சாதாரணமா நினைச்சுடாதீங்க! முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று, கோடியாக் (Kodiaq) ஆகும். அதிக விலைக்கு ஏற்ப அளவில் பெரிய தோற்றம் கொண்டதாக கோடியாக் விளங்குகிறது. மேலும், ஆற்றல்மிக்க என்ஜின் மற்றும் செயல்திறன்மிக்க மெக்கானிக்கல் பாகங்களை கொண்டதாக கோடியாக் விளங்குகிறது.

இத்தகைய காரின் பெர்ஃபார்மன்ஸை வெளிக்காட்டும் விதமாக கோடியாக் காரில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. அது என்னவென்றால், இமயமலையின் அடிவாரம் வரையில் ஸ்கோடா கோடியாக் காரை ஓட்டி சென்று அசத்தி உள்ளனர். இமயமலையின் வடக்கு முக அடிவார பகுதி வரையில் இரு கோடியாக் கார்களை ஓட்டி சென்றுள்ளனர்.

Skoda Kodiaq Reached Everest North Base Camp

இமயமலையின் வடக்கு முக அடிவாரத்தை பெட்ரோல் என்ஜினின் உதவியுடன் எட்டிய முதல் பெட்ரோல் காராக ஸ்கோடா கோடியாக் விளங்குகிறது. இதனால், கோடியாக் காரில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சாதனை இந்திய மற்றும் ஆசிய சாதனை புத்தகங்கள் இரண்டிலும் இடம் பிடித்துள்ளது. இந்த பயணத்தில் மொத்தம் 6 ஆயிரம் கிமீ தொலைவிற்கு இரு கோடியாக் கார்களை ஓட்டி சென்றுள்ளனர்.

மேலும், இந்த பயணத்தில் இந்தியா, நேபாளம் மற்றும் சீனா என மூன்று நாடுகளில் கோடியாக் கார்கள் ஓட்டி செல்லப்பட்டு உள்ளன. உலகின் மிக பெரும் மலையான இமயமலையின் அடிவாரத்தை எட்டுவதே பெரிய சவாலாகும். அப்படியிருக்க, வாகனத்தில் இந்த பயணத்தை செய்து முடிப்பது அதனினும் கடினமானது ஆகும்.

ஏனெனில், அந்த அளவிற்கு இமயமலையின் அடிவாரத்தை நோக்கிய பாதைகள் அனைத்தும் கரடு முரடானதாக இருக்கும். கோடியாக் கார்களில் இவர்கள் இமயமலையின் தெற்கு முக அடிவாரத்திற்கு செல்லவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம். தெற்கு முக அடிவாரத்திற்கு செல்ல ஆவது சற்று குறைவான தொலைவு பயணத்தை மேற்கொண்டாலே போதும். ஆனால், வடக்கு முக அடிவாரத்திற்கு இந்தியாவில் இருந்து செல்ல இமயமலையை சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியதாக இருக்கும்.

பனி, வறண்ட பகுதிகள், பலத்த காற்று, கடும் குளிர், இமயமலையின் வடக்கு பகுதியை அடைந்தவுடன் திடீரென ஏற்படும் அதிக வெயில் என அனைத்து விதமான காலச் சூழ்நிலைகளும் இந்த பயணத்தில் தாக்கும். குறிப்பாக, அதிக பனியினால் வழுக்கிவிடக்கூடிய பாதைகள் அதிகமாக இருக்கும். இதற்கெல்லாம் தயாராக தான் சென்றிருப்பர் என்றாலும், இமயமலையை சுற்றி 6 ஆயிரம் கிமீ பயணம் என்பது உண்மையில் அசாத்தியமானது ஆகும்.

இத்தகைய அசாத்தியமான பயணத்தை எளிதாக தாங்கி உள்ள கோடியாக் ஆனது உயரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். இதனை எம்.க்யூ.பி ஏ0-இந்தியா (MQB-A0-IN) பிளாட்ஃபாரத்தில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் உருவாக்குகிறது. இந்தியாவிலேயே உருவாக்கப்படுவதன் மூலமாக கோடியாக் காருக்கான பழுது பார்ப்பு சேவைகளும் நாடு முழுவதும் விரைவாக கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இமயமலையை சுற்றி 6,000கிமீ பயணம் என்பது உண்மையில் சாதனை ஆகும். நமக்கு அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் கார் ஓட்டுவது என்றாலே எவ்வளவு சவாலானதாக இருக்கும் நிலையி, இமயமலை தொடரை கடந்து மறுப்பக்கம் செல்வது என்பது கடினம் ஆகும். இதனை சாத்தியப்படுத்தி காட்டி இருக்கும் ஸ்கோடா கோடியாக் கார் மூலம் இன்றைய கால மாடர்ன் தொழிற்நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளன என்பதை அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 29, 2025, 14:02 [IST]
English summary
Skoda kodiaq reached everest north base camp as a indias first petrol car
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+