இந்த டிசம்பரிலேயே கார் வாங்குனா ரூ1 லட்சம் மிச்சம் பண்ணலாம்
ஸ்கோடா நிறுவனம் குஷாக் என்ற காரை தற்போது விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காரை தற்போது ராணுவ கேண்டீன் மூலம் கூட விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் இந்த காரை இந்த டிசம்பர் மாதமே வாங்கினால் ரூ1 லட்சம் வரை மிச்சம் செய்ய முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் காரை வாங்கினால் நீங்கள் வரி குறைப்பு பலன்களை பெற முடியும். புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பில் இந்த காரின் விலைகள் குறைந்தன. இந்நிலையில் இந்த காரை ராணுவ கேண்டீன் மூலம் வாங்கினால் இன்னும் குறைவான வரி செலுத்தி கார்களை வாங்க முடியும்.

பொதுவாக ராணுவ கேண்டீன்களில் வெளியில் உள்ளதை விட பாதி ஜிஎஸ்டி வரியில் வாகனங்களை வாங்க மடியும். கார்ஸ் 24 தளத்தில் உஉள்ள தரவுகளின்படி ஸ்கோடா ககுஷாக் கார் ரூ13.08 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை வாங்குவதன் மூலம் ரூ1 லட்சம் வரை மிச்சம் செய்ய முடியும்.
இதன் படி குஷாக் பிரஷ்டீஜ் 1.0 டிஎஸ்ஐ மேனுவல் கியர் கார் ரூ13.08 லட்சம் என்ற விலையிலும், குஷாக் பிரஷ்டீஜ் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமெட்டிக் கியர் கார் ரூ13.93 லட்சம் என்ற விலையிலும், பிரஷ்டீஜ் 1.5 டிஎஸ்ஐ மேனுவல் கியர் கார் ரூ14.05 லட்சம் என்ற விலையிலும், பிரஷ்டீஜ் 1.5 டிஎஸ்ஐ ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ரூ15.16 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது.

இந்தியா முழுவதும் ராணுவ அமைச்சகம் சார்பில் 34 இடங்களில் ராணுவ கேண்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆமதாபாத், வதோதரா, டில்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பைஆகிய பகுதிகளில் கேண்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உணவு, மெடிக்கல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குறைந்த விலையில் கிடைக்கும். இங்கு கார்கள் கூட கிடைக்கும்.
இங்கு ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ராணுவத்தில் கணவரை உயிரிழந்த மனைவிகள்,முன்னாள் ராணுவ வீரர்கள், மட்டுமே பொருட்களை வாங்க முடியும். அவர்களுக்கு பாதி ஜிஎஸ்டி விலையில் பொருட்களை வாங்க முடியும்.

ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் காருக்கு வரும் ஜனவரி மாதம் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வெளியாகப்போகிறது. இதன் பிறகு விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் விலை அதிகமாகிவட்டால் ராணுவ கேண்டீனிலும் விலை அதிகமாக வாய்ப்புள்ளது.இங்கு ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ராணுவத்தில் கணவரை உயிரிழந்த மனைவிகள்,முன்னாள் ராணுவ வீரர்கள், மட்டுமே பொருட்களை வாங்க முடியும். அவர்களுக்கு பாதி ஜிஎஸ்டி விலையில் பொருட்களை வாங்க முடியும்.
ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் காருக்கு வரும் ஜனவரி மாதம் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வெளியாகப்போகிறது. இதன் பிறகு விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் விலை அதிகமாகிவட்டால் ராணுவ கேண்டீனிலும் விலை அதிகமாக வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அப்டேட்டில் காஸ்மெட்டிக் மாற்றம் மட்டும் அல்லாமல் பல்வேறு அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்கள், இதன் உட்புறம் குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான ஸ்பை புகைப்படங்களின் படி பானரோமிக் சன் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த காரில் மறு வடிவமைப்பு செய்யப்ப்டட ஹெட்லைட் பெரிய ஃபாக் லைட், மீசை வடிவில் கிரில், கனெக்டெட்ட டிஆர்எல், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications









