மாருதி, டாடாவை வெடவெடத்து போக வைத்த புதிய கார்! அடுத்த மாசம் மொத்த மார்க்கெட்டும் அதிர போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஸ்கோடா குஷாக் கார், கடந்த 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில், ஸ்கோடா நிறுவனம் குஷாக் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல், இந்திய சாலைகளில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டபோது, கேமரா கண்களில் பலமுறை சிக்கியுள்ளது. தற்போது இந்த புதிய மாடல் விற்பனைக்கே தயாராகி விட்டது. ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த மாதம் (2026 ஜனவரி) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Skoda Kushaq

அனேகமாக அடுத்த மாதத்தின் 2வது பாதியில், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான புதிய வசதிகள் (Features) வழங்கப்படவுள்ளன.

இதில், பனரோமிக் சன்ரூஃப் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். தற்போது விற்பனையில் உள்ள மாடலில் சிங்கிள் பேன் சன்ரூஃப் மட்டுமே வழங்கப்படுகிறது. இதுதவிர லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதியதாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Maruti Suzuki Grand Vitara

இந்த வரிசையில் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு பதிலாக, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் தற்போதைய மாடலில் வழக்கமான வயர் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிதான் வழங்கப்படுகிறது.

ஆனால் புதிய மாடலில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படலாம். எனினும் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் ரியர் ஏசி வெண்ட்கள் போன்ற வசதிகள், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே, ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் ஸ்கோடா குஷாக் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. எனவே மிகவும் பாதுகாப்பான ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா குஷாக் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி விக்டோரிஸ், டாடா சியரா, டாடா கர்வ், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, December 5, 2025, 23:27 [IST]
English summary
Skoda kushaq facelift india launch next month all you need to know
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+