குறைந்த விலைன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க! காஸ்ட்லி கார் மாதிரி ஓடுது!
இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் வளர்ச்சி என்பது நிலையாக இல்லாமல் மேலும் கீழூமாக தான் சென்று கொண்டிருந்தது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் ஸ்கோடா நிறுவனம் இந்திய விற்பனைக்கான கட்டுப்பாடுகளை எடுத்து 2.0 என்ற புரோக்ராமை துவங்கிய பிறகு அந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. தற்போது இதை இரண்டு மடங்காக மாற்ற அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இதற்காக ஸ்கோடா நிறுவனம் கைலாக் என்ற நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி காரை களம் இறங்குகிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம் கியூபி ஏ0 ஐஎன் என்ற பிளாட்பார்மில் ஸ்கோடா பிராண்ட் கீழ் உருவாகும் மூன்றாவது காராக இந்த கைலாக் கார் இருக்கிறது.

இந்த மூன்று கார்களிலேயே சிறிய காராக இந்த கார் தான் இருக்கிறது. இந்த காருகான பெயர் குறித்த தேர்வை இந்திய மக்களே தேர்வு செய்யலாம் என ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதில் சுமார் 2 லட்சம் பேர் இந்த பெயரை தேர்வு செய்ததால் இந்த காருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கைலாக் என்ற வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. கைலாக் என்றால் ஆங்கிலத்தில் கிரிஸ்டல் என்ற பொருள் தரும் சொல்லாகும். அதே நேரத்தில் கைலாய மலையையும் குறிக்கும் வகையில் இந்த பெயர் இருப்பதால் இந்த பெயரை தேர்வு செய்துள்ளார்கள். குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதால் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெறும் என்பதால் சிறப்பான பெயரை தேர்வு செய்வதற்காக இப்படியான போட்டிகள் நடத்தப்பட்டது.

ஸ்கோடா கைலாக் காரின் வடிவமைப்பை பொறுத்தவரை சிறிய வெர்ஷன் போல காட்சியளிக்கிறது. ஸ்கோடா குஷாக் காரில் உள்ள பல்வேறு டிசைனர் அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக ஸ்லிமான கிரில் பகுதி, ஸ்பிலிட் எல்இடி லைட், முன் பக்கம் கருப்பு நிற மற்றும் சில்வர் நிற ஃபாக்ஸ் பாஸ் பிளேட் ஆகிய அம்சங்கள் உள்ளன.
பக்கவாட்டு பகுதியை பொருத்தவரை பெரிய வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மூத்தான கதவுகள் வழங்கப்பட்டுள்ளன அதில் கருப்பு நிற ரூப் ரெயலர்கள் வழங்கப்பட்டுள்ளது. சி பில்லர் திக்காக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக முன் பக்க டிஆர்எல்-ல் இருந்து பின்பக்க கதவு வரையிலான கேரக்டர் லைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீல் ஆர்ச்சுகள் கருப்பு நிற கிளாடிங் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் ரக்காட் லுக்கில் இருக்கிறது. இந்த காரில் 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரட் பின் பக்கம் ரூப் பகுதியில் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது. அதில் மூன்றாவது டெயில் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது. ரெகுலரான மற்ற இரண்டு டெயில் லைட்டுகள் எல்இடி அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது கருப்பு நிற பிளாஸ்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது .இந்த பிளாஸ்டிக்கில் ஸ்கோடா என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. பின்பக்க பம்பர் சற்று பெரிதாக இருக்கிறது. இதில் கருப்பு நிற கிளாடிங் மற்றும் சில்வர் ஃபாஸ்க் பிளேட் அம்சங்களும் உள்ளன.
இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை நீங்கள் வீட்டில் இருக்கும் உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுலபமாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில் 8 இன்ச் கொண்ட டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதுபோக பத்து இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளைவை சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் சீட்களை பொறுத்தவரை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போலியான லெதர் போன்ற அமைப்பை கொண்ட மெட்டீரியல் கொண்டு இந்த சீட் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க சீட்டு எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் அம்சம் கொண்டதாக இருக்கிறது. இதுபோக இதில் வென்டிலேட்டட் ஆப்ஷனும் இருக்கிறது பின்பக்க சீட்டும் சொகுசாம்சத்துடன் இருக்கிறது. பின்பக்க சீட்டில் ஹெட் ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தை பொருத்தவரை தற்போது உள்ள நவீன எஸ்யூவி காரர்களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த காரிலும் இருக்கிறது. இதில் சன்ரூஃப், கீலெஸ் என்ட்ரி, வயர்லெஸ் போன் சார்ஜிங், கூல்டு கிளவ் பாக்ஸில் உள்ள அம்சங்கள் இருக்கிறது. இது பயணிகளுக்கு வசதியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா கைலாக் காரை பொறுத்தவரை 446 லிட்டர் பூட் வசதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் மிகப்பெரிய இட வசதி தான். சில சூட்கேஸ்களை இதில் எடுத்துச் செல்ல முடியும். இதுபோக இந்த காரின் ஃப்ளோருக்கு அடிப்பகுதியில் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது.
இதில் அதிகமான பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். மொத்தமாக 446 லிட்டர் அளவிலான இடவசதி இருக்கிறது. இதுபோக அதிக இட வசதி வேண்டும் என்றால் நீங்கள் பின்பக்கம் உள்ள சீட்டை மடித்துக் கொள்ள முடியும். அதற்கு வசதியாக 60க்கு 40 என்ற ரேஷியோவில் இந்த சீட்டு பிரிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா கைலாக கார் விற்பனைக்கு வருவதற்கு முன்பே பாரத் என் கேப்பில் பாதுகாப்புக்கான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதற்காக அந்த காரில் ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலேக்ட்ரானிக்ஸ் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல்,குழந்தைகளுக்கான சீட் மவுண்ட் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த காரில் அடாஸ் தொழில்நுட்பம் பொருத்தப்படவில்லை. இப்படியான கார்களில் அடாஸ் தொழிற்நுட்பம் தற்போது வெளியாகும் வாகனங்களில் பொருத்தப்படும் நிலையில் இந்த காரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோடா கைலாக் காரின் அளவுகளை பொறுத்த வரை 3995 மிமீ நீளமும் 1783 மிமீ அகலமும் 1619 மீமி உயரமும் 2566 மிமீ அளவிலான வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 189 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அளவுகளை பொருத்தவரை இந்த கார் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வாகனத்தில் சிறப்பான வாகனமாகவே இருக்கிறது. அதிக இட வசதியும் இதில் இருக்கிறது.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 3 சிலிண்டர், 999 சிசி டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 113 பிஎச்பி பவரையும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது. அதற்காக 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கைலாக் காரில் ஸ்கோடா நிறுவனம் வழக்கமாக பயன்படுத்தும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸை பொருத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோடா கைலாக் கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 10.5 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யவியிலேயே சிறப்பான பிக்கப் கொண்ட காராக இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் உள்ள பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் பிரேக்கர்களும் பின்பக்கம் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
சஸ்பென்சன் சிஸ்டத்தை பொருத்தவரை ஸ்கோடா காரில் உள்ள அதே சஸ்பென்ஷன் சிஸ்டம் தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஸ்கோடா நிறுவனம் இந்த சஸ்பென்ஷன் சிஸ்டத்தில் சில அட்ஜெஸ்ட்மெண்ட்களை செய்து ரைடு ஸ்மூத்தாகவும், சொகுசாகவும் இருக்கும் வகையில் உருவாக்கியுள்ளது. இதனால் நீங்கள் சாலையில் பயணிக்கும் போது சிறப்பான அனுபவத்தை பெற முடியும்.
இந்த ஸ்கோடா கைலாக் காரை ஓட்டி பார்க்க நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு டாப் வேரியன்ட் காரான 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட கார் தான் வழங்கப்பட்டது. கோவாவில் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இந்த காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் 999 சிசி டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறப்பான டிரைவிங் ஒரு அனுபவத்தை எங்களுக்கு வழங்கியது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் நாம் வேகத்திற்கு தகுந்தார் போல் சிறப்பாக செயல்பட்டது.
என்னதான் இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டாலும், இதில் s என்ற மோடு வழங்கப்பட்டுள்ளது. இந்த மோடை பயன்படுத்தி தான் பெடல் ஷூட்டங்கள் மூலம் கியரை கண்ட்ரோல் செய்ய முடியும். கியரை தன் கண்ட்ரோலில் வைத்து வாகனம் ஓட்ட விரும்புவர்களுக்கு இந்த ஆப்ஷன் சிறப்பானதாக இருக்கும். இதனால் ஸ்போர்ட்டியான ஒரு ஃபீலையும் அவர்களால் அனுபவிக்க முடியும்.
சஸ்பென்ஷன் சிஸ்டம் சற்று சிறப்பாக இருக்கும் வகையில் நாங்கள் உணர்ந்தோம். இதனால் வேகமாக ஓட்டும் போது ஹேண்டிலிங்கிற்கு சில சங்கடங்களை நாங்கள் உணர்ந்தோம். ஆனால் திருப்பங்களில் எல்லாம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த கார் திருப்பியது. பள்ள மேடுகள் எல்லாம் அசால்ட்டாக தாண்டி சென்றது என சொல்லலாம்.
இந்த காரில் உள்ள ஸ்டீரிங் வில் வெயிட்டாக இருப்பது போன்ற ஒரு அனுபவத்தை கொடுத்தது. இதனால் வேகமாக செல்லும்போதும் கான்ஃபிடென்ஸாக வாகனம் ஓட்ட முடியும். லாஞ்ச் செய்வதும் சுலபமாக இருக்கும். இந்த காரில் உள்ள பிரேக்குகளும் சிறப்பாக செயல்படுகிறது. வழக்கமான பிரேக்கை விட டபுள் மடங்கு சிறப்பாக செயல்படுகிறது என சொல்லலாம்.
ஸ்கோடா கைலாக் கார் நிறுவனத்தின் சிறப்பான காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி கார் செக்மெண்டில் இந்த கார் சிறப்பான போட்டியை வழங்குமே எதிர்பார்க்கலாம். நாங்கள் இந்த காரை ஓட்டி பார்த்தபோது பெரும்பாலான விஷயங்கள் சிறப்பாக இருந்தன. நீங்கள் நான்கு மீட்டர்க்கும் குறைவான குறைந்த விலை எஸ்யூவி காரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் ஸ்கோடா கைலக் காரையும் நிச்சயம் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கான தேவையை பொருத்து நீங்கள் நிச்சயம் இந்த காரை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications









