7.89 லட்ச ரூபா கார் இவ்ளோ மைலேஜை தருதா! ஆச்சரியத்தில் எஸ்யூவி கார் பிரியர்கள்.. போட்டி பலமா இருக்க போகுது!

பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா (Skoda), சமீபத்தில் இந்தியாவில் தன்னுடைய புதுமுக கார் மாடலான கைலாக் (Kylaq)-கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிகவும் குறைவான விலையிலேயே இந்த காரை அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ரூ. 7.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையே அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விலை குறைவாக இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தாலும், அதிக பிரீமியம் அம்சங்களை வழங்க அது தவறவில்லை.

இதுமட்டுமல்ல பாதுகாப்பு விஷயத்திலும் தலை சிறந்த கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. பாரத் என்சிஏபி வாயிலாகவே இந்த ரேட்டிங்கை அது பெற்றது. இந்த நிலையிலேயே ஸ்கோடா கைலாக் மைலேஜ் தருவதிலும் சிறந்த வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

Skoda kylaq fuel efficiency revealed

ஸ்கோடா கைலாக் இந்தியாவில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்கிற இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அந்தவகையில், இதன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 19.68 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் 19.05 கிமீ மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ஸ்கோடா கைலாக் கார் மாடலை ஒற்றை மோட்டார் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் மட்டுமே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. ஸ்கோடா நிறுவனத்தின் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அந்த கார் மாடலின் மலிவு விலை மட்டுமல்ல, அதன் அதீத பிரீமியம் அம்சங்களும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆமாங்க விலை உயர்ந்த பிரீமியம் கார்களுக்கு இணையான அம்சங்களையே இது தன்னுள் தாங்கி இருக்கின்றது. 8 அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை, 10 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளே இணைப்பு ஆகிய அம்சங்களையே இந்த கார் மாடல் தாங்கி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல 6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமிரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் ஸ்கோடா கைலாக் காரில் இடம் பெற்றிருக்கின்றன. ஸ்கோடா நிறுவனம் மிகவும் சவால் நிறைந்த காம்பேக்ட் எஸ்யூவி கார் மார்க்கெட்டிலேயே கைலாக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த பிரிவின் மிக சிறந்த போட்டியாளனாக டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சொனெட் உள்ளிட்டவை இருக்கின்றன. இதுமட்டுமல்ல மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார் மாடல்களும் இந்த பிரிவின் சிறந்த கள வீரர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாகவே ஸ்கோடா நிறுவனம் கைலாக் காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கோடா கைலாக் கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்க தற்போது வெளியாகி இருக்கும் அதன் மைலேஜ் திறன் பற்றிய தகவல் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, போட்டியாளர்களுக்கு அதீத போட்டியை இது வழங்கும் என்றும் யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 22, 2025, 22:08 [IST]
English summary
Skoda kylaq fuel efficiency details revealed 19 68 kmpl and 19 05 kmpl
மேலும்... #skoda #Skoda Kylaq #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+