குறைஞ்ச விலைக்கு கொண்டு வந்து இந்தியர்கள வளச்சு போட போறோம்னு சொன்னாங்க.. இப்ப இந்த மாதிரி வேலய பாத்திருக்காங்க

இந்தியர்களை வளச்சு போட வேண்டும் என்கிற நோக்கில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா (Skoda), கைலாக் (Kylaq) எனும் புதுமுக கார் மாடலை இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 7 லட்சத்து 89 ஆயிரம் என்கிற குறைவான விலையிலேயே இந்த காரை அது நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த சப் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக கார் மாடல் ஆகும்.

கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய எஸ்யூவி கார் என்பதாலும், விலை ரூ. 8 லட்சம் கூட இல்லாத காரணத்தினாலும் இதற்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் பிப்ரவரியில் 3,636 யூனிட்டுகளும், மார்ச் மாதத்தில் 5,327 யூனிட்டுகளும் கைலாக் கார் விற்பனையாகியது.

Skoda kylaq prices hiked

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கார் மாடலின் விலையை ஸ்கோடா நிறுவனம் உயர்த்தி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 7.89 லட்சமாக இதன் ஆரம்ப விலையை இப்போது ரூ. 8.25 லட்சமாக ஸ்கோடா நிறுவனம் உயர்த்தி இருக்கின்றது.

ஒரே அடியாக இந்த கார் மாடலின் விலையில் ரூ. 36 ஆயிரத்தை ஸ்கோடா நிறுவனம் உயர்த்தி இருக்கின்றது. இதனால்தான் பலருக்கு இந்த விலை உயர்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, மலிவு விலை கார் பிரியர்களை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கின்றது.

Skoda kylaq front view

மேலே பார்த்த இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் அதன் விலை இன்னும் சற்று அதிகமாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஸ்கோடா கைலாக் இந்தியாவில் கிளாசிக் (Classic), சிக்னேச்சர் (Signature), சிக்னேச்சர் பிளஸ் (Signature +) மற்றும் பிரஸ்டீஜ் (Prestige) ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில் கிளாசிக் வேரியண்டைத் தவிர்த்து மற்ற மூன்று வேரியண்டுகளிலும் மேனுவல் (Manual) மற்றும் ஆட்டோமேட்டிக் (Automatic) இரண்டு விதமான கியர்பாக்ஸ் (Transmission) ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதில் உயர்நிலை வேரியண்ட் சிலவற்றின் விலையை ஸ்கோடா நிறுவனம் குறைக்கவும் செய்து உள்ளது.

Skoda kylaq side view

ஆமாங்க, ஆரம்ப நிலை தேர்வின் விலையை உயர்த்தியதைப் போலவே உயர்நிலை வேரியண்டுகள் சிலவற்றின் விலையை அந்நிறுவனம் குறைக்கவும் செய்திருக்கின்றது. இதில் அதிகபட்சமாக பிரஸ்டீஜ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனின் விலையே குறைக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 46 ஆயிரம் வரை அதன் விலையில் குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது.

இது மேனுவல் ஆப்ஷனில் செய்யப்பட்ட விலை குறைப்பு மட்டுமே ஆகும். இதேபோல் பிரஸ்டீஜ் வேரியண்டின் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனின் விலையிலும் குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. அதன் விலையில் ரூ. 41 ஆயிரமே குறைக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்ல, சிக்னேச்சர் பிளஸ் வேரியண்டின் விலையும் குறைக்கப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக, மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஆப்ஷனின் விலையில் ரூ. 15 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல், இதன் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனின் விலையில் ரூ. 5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் சிக்னேச்சர் வேரியண்டின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களில் விலையில் ரூ. 26 ஆயிரம் முதல் 36 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்ததப்பட்டு இருக்கின்றது.

ஆகையால் அவற்றின் விலை இப்போது ரூ. 9.85 லட்சம் மற்றும் 10.95 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் கைலாக் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழலிலேயே இந்த விலை குறைப்பு மற்றும் உயர்வு என கலவையான நடவடிக்கையை இந்த கார் மாடலில் ஸ்கோடா நிறுவனம் மேற்கொண்டிருக்கின்றது.

ஆகையால், இந்த காரின் விற்பனையில் எந்தவொரு பெரிய மாற்றமும் இருக்காது என நம்பப்படுகின்றது. மிக அதிக அளவில் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய ஓர் கார் மாடலே கைலாக் எஸ்யூவி ஆகும். இந்த காரில் ஆப்பில் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆகிய இணைப்பு வசதிக் கொண்ட 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தொடங்கி டைப் சி சார்ஜிங் போர்ட் வரை என பல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமல்ல, குரோம் கார்னிஷ், ஆர்ம் ரெஸ்ட், பார்சல்களுக்கான டிரே, க்ரூஸ் கன்ட்ரோல், பின் பக்கத்தில் டிஃபாக்கர் போன்ற அம்சங்களை இந்த காரில் ஸ்கோடா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமல்ல 6 ஏர் பேக்குகள், இபிடி, ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரிஸ் ஸ்கோடா வழங்கி இருக்கின்றது.

அத்துடன், ஆட்டோமேட்டிக் எஞ்சின் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, ஐசோஃபிக்ஸ் சீட் ஆங்கர் போன்றவற்றையும் கைலாக் தன்னுள் தாங்கி உள்ளது. இதுமட்டுமல்ல இந்த காரில் டில்ட் அட்ஜஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீலும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுபோன்று சிறப்பம்சங்களை மிக தாராளமாகக் கொண்டிருக்கும் இந்த கார் மாடலில் ஒரே ஒரு எஞ்சின் மட்டுமே வழங்கப்படுகின்றது. 115 பிஎச்பி மற்றும் 178 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டாரே இதில் வழங்கப்படுகின்றது. இதனுடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.

இந்த காரை இந்தியர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக ஸ்கோடா நிறுவனம் ஆர்டர் கொடுத்த அடுத்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனமான ஜெப்டோ உடன் அது சமீபத்தில் கை கோர்த்தது என்பது கவனிக்கத்தகுந்தது. தன்னுடைய கார்களை கஸ்டமர்களுக்கு உடனடியாக டெலிவரி கொடுக்கும் பொருட்டே இந்த கூட்டணியை கடந்த சில மாதங்களுக்குத் தொடங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப காலமாகவே வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. அதற்கு வாகன கட்டுமான செலவு தொடர்ச்சியாக உயர்ந்து வருவதையே வாகன உற்பத்தியாளர்கள் காரணமாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே ஸ்கோடா நிறுவனம் அதன் மலிவு விலை காரின் விலையை உயர்த்தி இருக்கின்றது. இதனால், சற்றே விலை குறைவான காராக காணப்பட்ட கைலாக் இப்போது சற்றே காஸ்ட்லியான காராக மாறியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 2, 2025, 5:00 [IST]
English summary
Skoda kylaq prices hiked to rs 8 25 lakh amid rising demand and variant adjustments
மேலும்... #skoda #Skoda Kylaq #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X