மாருதி, டாடாவின் தூக்கத்தை கெடுத்த விலை குறைவான புதிய கார்! மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போட்டுட்டு இருக்கு!
இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் சவால் நிறைந்தது. இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே ஏராளமான கார்கள் ஒன்றுக்கு ஒன்று மிக கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
எனவே தொடர்ச்சியாக ஏராளமான புதிய கார்கள், இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கொண்டே வருகின்றன. இந்த வரிசையில் இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் சமீபத்தில் நுழைந்திருக்கும் ஒரு புதிய கார் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) ஆகும்.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில்தான் ஸ்கோடா கைலக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில்தான் ஸ்கோடா கைலக் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டன. அப்போதில் இருந்து ஒவ்வொரு மாதமும் விற்பனையில் முன்னேறி கொண்டே வருகிறது ஸ்கோடா கைலக்.
நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,245 ஸ்கோடா கைலக் கார்களும், பிப்ரவரி மாதம் 3,636 ஸ்கோடா கைலக் கார்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை அதன் பின் வந்த மார்ச் மாதம் 5,327 ஆக உயர்ந்தது. அதன் பின் வந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 5,364 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்கோடா கைலக் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு பெரிய வரவேற்பை வழங்கி கொண்டுள்ளனர் என்பதை இந்த எண்கள் நமக்கு மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகின்றன. சந்தைக்கு புது வரவான ஸ்கோடா கைலக் காரின் சிறப்பம்சங்கள்தான், இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
ஸ்கோடா கைலக் காரில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த காரில் பாதுகாப்பு (Safety) வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

பாதுகாப்பை பொறுத்தவரையில், ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ட்ராக்ஸன் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்க வசதிகளாக உள்ளன. அத்துடன் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கையும் (5 Star Rating) பெற்றுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில், ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய கார்களில் வழங்கப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான், ஸ்கோடா கைலக் காரிலும் வழங்கப்படுகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.25 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.99 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ஸ்கோடா கார் கைலக்தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3X0), டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet), மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) போன்ற கார்களுக்கு எல்லாம் ஸ்கோடா கைலக் சவாலாக மாறி வருகிறது.


Click it and Unblock the Notifications









