அடிமாட்டு விலையில் மார்க்கெட்டிற்கு வந்த புதிய கார்! டாடா, மாருதியையே ஆட்டம் காண வெச்சுருமாட்ட இருக்கு!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இதன் காரணமாக குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஸ்கோடா கைலக் காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும் ஸ்கோடா கைலக் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால், ஸ்கோடா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 3,377 கைலக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டை செய்ய முடியாது.
ஆனால் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், ஸ்கோடா குஷாக் கார், வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வி3 கார்ஸ தளம் வெளியிட்டுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், ஸ்கோடா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 3,196 குஷாக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன் பின் வந்த ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 3,377 ஆக உயர்ந்துள்ளது.

இது 5.36 சதவீத வளர்ச்சி ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப விலை வெறும் 8.25 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இந்திய சந்தையில் தற்போது ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்து வரும் கார்களிலேயே கைலக்தான் மிகவும் விலை குறைவானது. இதுவே ஸ்கோடா கைலக் காரின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அத்துடன் ஸ்கோடா கைலக், மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும்.
பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனையில் (Crash Test) ஸ்கோடா கைலக் கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5-star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை எல்லாம் ஸ்கோடா கைலக் கொண்டுள்ளது.
அத்துடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளை எல்லாம் ஸ்கோடா கைலக் எஸ்யூவி கார் கொண்டுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில், 115 பிஎஸ் பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), ரெனால்ட் கைகர் (Renault Kiger), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) ஆகிய கார்களுக்கு எல்லாம், ஸ்கோடா கைலக் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








