இவ்ளோ கம்மியான விலையில் ஸ்கோடா காரா! நம்பவே முடியல! மாருதி, டாடாவிற்கு இந்நேரம் நடுக்கம் ஆரம்பிச்சிருக்கும்!

ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் கார்கள் சற்று பிரீமியம் தயாரிப்புகளாக கருதப்படுகின்றன. அப்படிப்பட்ட ஸ்கோடா நிறுவனத்திடம் இருந்து மிகவும் குறைவான விலையில் ஒரு கார் அறிமுகம் செய்யப்பட்டால், அதன் விற்பனை அனைவருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) விஷயத்தில் நடந்தது இதுதான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப விலை வெறும் 7.55 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

Skoda Kylaq

இந்தியாவில் தற்போதைய நிலையில் மிகவும் விலை குறைவான ஸ்கோடா கார் எது என கேட்டால், பச்சை குழந்தை கூட, ஸ்கோடா கைலக் என சரியாக கூறி விடும். ஏனெனில் ஸ்கோடா நிறுவனத்தின் லைன்-அப்பில், கைலக் தவிர, வேறு எந்த காரின் விலையும் இவ்வளவு குறைவாக இல்லை.

இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ஸ்கோடா கைலக் பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. ஸ்கோடா கைலக் காரின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Skoda Kylaq Side Design

இதன்படி பார்த்தால், ஸ்கோடா நிறுவனம்,நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 4,398 கைலக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா நிறுவனத்தின் கார் என்ற பெருமையை கைலக் தட்டி சென்றுள்ளது.

ஆனால் இந்த விற்பனை எண்ணிக்கையை கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் ஸ்கோடா கைலக் காரின் வாடிக்கையாளர் டெலிவரி பணிகள் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்துதான் தொடங்கப்பட்டன. இருப்பினும் நம்மால் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டை மேற்கொள்ள முடியும்.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்கோடா நிறுவனம், 3,099 கைலக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 4,398 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 1,299 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 41.92 சதவீத வளர்ச்சி ஆகும்.

ஸ்கோடா கைலக் கார், பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 2 தரப்பினருக்குமான பாதுகாப்பிலும், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், இந்த காரில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சன்ரூஃப், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளையும், ஸ்கோடா கைலக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, ஸ்கோடா கைலக் காரை, மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களான டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற கார்களுக்கு எல்லாம் ஸ்கோடா கைலக் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, October 20, 2025, 12:40 [IST]
English summary
Skoda kylaq sales report september 2025 41 92 per cent growth
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+