குடும்பத்தோட போகலாம், விலையும் வெறும் ரூ 8 லட்சம் தான், ஆனா உடனே வாங்க முடியாது!

ஸ்கோடா கைலாக் எஸ்யூவி, ஒரு சப்-காம்பேக்ட் மாடல் கார் ஆகும், இந்தியாவில் டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவரிக்கு தற்போது இந்த கார் கிடைக்கிறது. டாடா நெக்ஸான், மாருதி சுஸகி பிரெஸ்ஸா, மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற வாகனங்களுடன் போட்டியிடும் இந்த கார் வேரியன்ட் அடிப்படையில் 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளது. இந்த எஸ்யூவி காரின் விலை ₹7.89 லட்சம் முதல் ₹14.40 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்).

ஸ்கோடா இந்தியா 2025 மே மாதத்திற்குள் 33,000 கார்களை டெலிவரி செய்ய இலக்கு வைத்துள்ளது. போட்டி சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் மார்கெட் பங்கை அதிகரிக்க போடப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இது. ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் ஏஜியின் தயாரிப்பு விரிவாக்கத்தை வழிநடத்துகிறது என்பதால் இந்த கார்களில் பெரும்பாலானவை டாப் வேரியன்ட்களாக இருக்கும்.

Skoda Kylaq Waiting Period

ஸ்கோடா கைலாக் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜினால் இயக்கப்படுகிறது. இது 113 bhp பவர் மற்றும் 178 Nm டார்க் திறனை உருவாக்குகிறது. வாடிக்கையாள்கள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை தேர்வு செய்யலாம். மேனுவல் வெர்ஷன் 19.05 kmpl மைலேஜை வழங்குகிறது, அதேசமயம் ஆட்டோமேட்டிக் 19.68 kmpl மைலேஜை வழங்குகிறது.

ஸ்கோடா கைலாக் காரின் காத்திருப்பு காலம் அதன் வேரியன்ட்களில் வேறுபடுகிறது. பேஸிக் கிளாசிக் வேரியன்ட் 4 மாதங்கள் வரை நீண்ட காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளது மற்றும் இது மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் குறைந்த கலர் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கிறது. ஆரம்பத்தில், இந்த வேரியன்டிற்கான ஆர்டர்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டு, இரண்டாவது பேட்ஜ்ஜில் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Skoda Kylaq Waiting Period

மிட் வேரியன்டான சிக்னேச்சர் வேரியன்ட், கலர் ஆப்ஷன்களை பொறுத்து, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டு கியர் பாக்ஸ் வெர்ஷன்களுக்கும் 3 முதல் 4 மாதங்கள் வரை சராசரி காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளது. அதேசமயம், டாப்-டியர் சிக்னேச்சர்+ மற்றும் பிரஸ்டீஜ் வேரியன்ட்கள்கள், கலர் அல்லது கியர்பாக்ஸ் எதுவாக இருந்தாலும், 2 முதல் 3 மாதங்கள் வரை காத்திருப்பு நேரத்துடன் எளிதாக கிடைக்கின்றன.

டாப் வேரியன்ட் சப்-காம்பேக்ட் எஸ்யூவிகளில் ஸ்கோடாவின் முக்கிய கவனம் இருக்கிறுது, இந்தியாவின் மோட்டார் வாகன சந்தையில் பெரிய பங்கைப் பிடிக்க வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தை இது பிரதிபலிக்கிறது. அவர்களின் ஆரம்ப டெலிவரி கட்டத்தில் டாப் வேரியன்ட் மாடல்களுக்கு முன்னுரிமைப்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்ய இலக்கு வைத்துள்ளனர்.

Skoda Kylaq Waiting Period

இந்த அணுகுமுறை, உற்பத்தி அட்டவணைகளை திறமையாக நிர்வகிக்கும் அதே வேளையில் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஸ்கோடாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் மற்றும் விவரக்குறிப்புகளைப் பொறுத்து மாறுபடும் காத்திருப்பு காலங்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலையில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல மவுசு இருக்கும் நிலையில் இந்த ரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. ஸ்கோடா நிறுவனம் இப்படியாக ஒரு காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பலரை ஈர்த்துள்ளது. இதன் விற்பனை நிச்சயம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதன் காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது. இதை குறைத்தால் நிச்சயம் பெரிய விற்பனை நடக்கும்

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2025, 13:58 [IST]
English summary
The Skoda Kylaq SUV is officially available for test drives in India, with prices ranging from ₹7.89 lakh to ₹14.40 lakh. With various trims and a waiting period of up to four months, Skoda aims to capture market share in the sub-compact segment.
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X