பேரனுக்கு வேணும்னு சிஎம் போன் பண்ணி கேட்டாலும் கிடைக்கறது டவுட்! நாடே எதிர்பாத்த காருக்கு புக்கிங் தொடங்கியது!
இந்தியாவில் ஒரு சில கார்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும். சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் (Mahindra BE 6 Batman Edition) இதற்கு ஒரு உதாரணம். வெறும் 999 பேருக்கு மட்டுமே கிடைக்கும் வகையில், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வரிசையில் தற்போது முன்பதிவுகள் (Bookings) தொடங்கப்பட்டுள்ள ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (Skoda Octavia RS) கார், 100 பேருக்கு மட்டுமே கிடைக்கும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு தற்போது முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, வெறும் 100 பேரால் மட்டுமே ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை வாங்க முடியும். ஸ்கோடா நிறுவனம் இந்த காரை இந்தியாவில் உற்பத்தி செய்ய போவதில்லை. மாறாக முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யவுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில், ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 195 kW பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக காரின் முன் பக்க சக்கரங்களுக்கு செலுத்தப்படும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.4 வினாடிகளிலேயே ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் எட்டி விடும். அதே சமயம் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது.
ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 10 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
அதே நேரத்தில் 32.77 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 26.03 செமீ விர்ச்சூவல் காக்பிட், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளும் கூட, ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் விலை 45 முதல் 50 லட்ச ரூபாய் வரை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Expected Ex-Showroom Price) ஆகும். தற்போதைய நிலையில் முன்பதிவுகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா ஆர்எஸ் காரின் விலை எவ்வளவு? என்பதை வரும் அக்டோபர் 17ம் தேதிதான் அறிவிக்கவுள்ளது.
இதை தொடர்ந்து ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் நவம்பர் 6ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளன. எனவே கூடிய விரைவில் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை நாம் சாலைகளில் பார்க்கலாம். ஆனால் 100 பேருக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதால், இது மிகவும் அரிதான ஒரு காராகவே இருக்கும். அத்துடன் 100 பேருக்கு மட்டுமே கிடைக்க கூடியது என்ற காரணத்தால், வெகு விரைவாகவே 100 யூனிட்களும் முன்பதிவு செய்யப்பட்டு விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








