வெறும் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்த காரின் டெலிவரி தொடங்கியது! இதுக்காகதான் இந்தியாவே காத்து கிடந்துச்சு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (2025 Skoda Octavia RS) கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தைக்கு என மொத்தம் 100 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன.
இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார் என்பதால், 100 கார்களும் உடனடியாகவே முன்பதிவு (Bookings) செய்யப்பட்டு விட்டன. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 20 நிமிடங்களிலேயே, 100 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்களும் விற்று தீர்ந்து விட்டன. இந்த சூழலில், முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்களை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் இந்தியா முழுவதும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 265 பிஎஸ் பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இது செயல்திறன் மிக்க செடான் ரக கார் ஆகும். எனவே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.4 வினாடிகளிலேயே எட்டி விட கூடிய திறனை 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது.

அதே நேரத்தில் 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ஸ்ட்டர், 13 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 12 ஸ்பீக்கர் கான்டான் சவுண்ட் சிஸ்டம், மெமரி மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
இவை எல்லாம் தவிர, கூலிங் பேட் உடன் 15W வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் போன்ற வசதிகளையும், 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இதுதவிர 10 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், ஆட்டோ பார்க் அஸிஸ்ட் மற்றும் ஹைட்ராலிக் பிரேக் அஸிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளையும், 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் கொண்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) 49.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா நிறுவனம் கூடிய விரைவில் ஆக்டோவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பை இந்தியாவிற்கு ஒதுக்கவுள்ளது. அனேகமாக வரும் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பு இந்தியாவிற்கு ஒதுக்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2வது தொகுப்பில் இந்தியாவிற்கு எத்தனை ஆக்டோவியா ஆர்எஸ் கார்களை ஸ்கோடா நிறுவனம் ஒதுக்கும்? என்பது தற்போதைய நிலையில் உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








