வெறும் 20 நிமிஷத்துல அத்தன காரும் வித்துருச்சா! இனி முதலமைச்சரின் மருமகனே கேட்டாலும் கிடைக்காது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (2025 Skoda Octavia RS) கார், இன்று (அக்டோபர் 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் (Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 261 பிஹெச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் (Gear Box) இணைக்கப்பட்டுள்ளது.

Skoda Octavia RS

இது செயல்திறன் மிக்க செடான் ரக கார் ஆகும். எனவே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.1 வினாடிகளிலேயே எட்டி விடும். 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரானது, மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) விற்பனைக்கு கிடைக்கும்.

அவை வெல்வெல் ரெட், ரேஸ் ப்ளூ, மேஜிக் பிளாக், கேண்டி ஒயிட் மற்றும் மாம்பா க்ரீன் ஆகியவை ஆகும். வசதிகளை (Features) பொறுத்தவரையில், 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.

Skoda Octavia RS Front

இவை எல்லாம் தவிர, 360 டிகிரி கேமரா, டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்கள், ரெட் பிரேக் காலிபர்கள், 19 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள், முழுமையாக எல்இடி லைட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெயில்கேட் ஆகிய வசதிகளும், 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் முன் பகுதியில் மசாஜ், மெமரி, கூலிங் மற்றும் ஹீட்டிங் வசதியுடன் கூடிய இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் விலை 49.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் விலை எவ்வளவு? என்பது இன்றுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, அனைத்து 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்களும் விற்பனையாகி விட்டன. அதாவது இந்திய சந்தைக்கு ஸ்கோடா நிறுவனம் நூறு 2025 ஆக்டோவியா ஆர்எஸ் கார்களை மட்டுமே ஒதுக்கியது.

அவற்றுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள், கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கின. ஆனால் முன்பதிவு தொடங்கப்பட்ட 20 நிமிடங்களிலேயே, 100 கார்களும் புக்கிங் செய்யப்பட்டு விட்டன. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும், நவம்பர் 6ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசு வசதிகள் உடன் கூடிய, அதே நேரத்தில் செயல்திறன் மிக்க ஒரு செடான் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மிகவும் ஏற்றதாக இருக்கும். இது 100 பேருக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், சாலையில் மிகவும் அரிதான ஒரு காராக இருக்க போகிறது என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, October 17, 2025, 17:12 [IST]
English summary
Skoda octavia rs launched in india price features delivery details
மேலும்... #skoda #luxury cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+