மொத்த ஸ்டாக்கும் காலி! 20 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த காஸ்ட்லி கார்! அப்படி இதுல என்னதான் இருக்குது?

ஸ்கோடா நிறுவனம் தனது ஆக்டவியா ஆர்எஸ் என்ற காரை இந்திய மார்கெட்டில் விற்பவனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் புக்கிங் துவங்கிய 20 நிமிடங்களிலேயே மொத்த காரும் விற்பனையாகி ஸ்டாக் காலியாகிவிட்டது. இந்த அளவிற்கு இந்த காருக்கு அப்படி என்ன டிமாண்ட் இருக்கிறது? இந்த காரின் விலை என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாரங்கள்.

இந்தியாவில் தனது விற்பனையை துவங்கி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் ஸ்கோடா நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் மக்கள் அதிகம் எதிர்பார்த்த தனது ஆக்டவியா ஆர்எஸ் என்ற காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ49.99 லட்சம் என்ற விலையில் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வந்த நிலையில் மீண்டும் இந்த காரை இந்தியாவிற்குள் கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டது.

Skoda Octavia RS Sold Out

ஆனால் இந்த முறை குறைவான எண்ணிக்கையிலான கார்களை மட்டுமே இந்தியாவிற்குள் கொண்டு வர திட்டமிட்டது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட 100 கார்களை மட்டும் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த காருக்கான புக்கிங்கையும் இந்நிறுவனம் துவங்கியது. இந்த கார் விற்பனை துவங்கப்பட்ட 20 நிமிடத்திலேயே ஒட்டு மொத்த காரும் புக்காவிட்டது. இந்த காரின் டெலிவரி வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் உள்ளஜிஎஸ்ஆர் 870 விதிகளின் கீழ் இந்த காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்கிறது. இந்த விதிமுறையின்படி மொத்தம் 2500 கார்களை ஆண்டிற்கு இறக்குமதி செய்ய முடியும். இந்த கார்கள் எல்லாம் இங்கிலாந்து அல்லது ஜப்பானில் தயாரிக்கப்பட்ட கார்களாக இருக்க வேண்டும். ஆக்டவியா ஆர்எஸ் காரை பொருத்தவரை செக்குடியரசு நாட்டில் உருவாக்கப்பட்டதால் இது இங்கிலாந்து தயாரிப்பாகவே கருதப்படும்.

Skoda Octavia RS Sold Out

இந்த ஆக்டவியா கார் என்பது ஒரு பெர்ஃபார்மென்ஸ் செடான் கார் ஆகும். இந்த காரில் டிசைன் மொழி, பெர்ஃபார்மென்ஸ் எல்லாம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது போக அதிக பாதுகாப்பு அம்சங்கள் மறஅறும் பிரிமியமான கேபின் வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு நீண்ட காலமாக இந்தியாவிங் ல் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த புதிய ஆக்டவியா ஆர்எஸ் காரை பொருத்தவரை 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 265 பிஎஸ் பவரையும் 370 என்எம் டார்க்திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரின் இன்ஜின் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Skoda Octavia RS Sold Out

இந்த காரின் ஃபெர்பார்மென்ஸை பொருத்தவரை 0-100 கி.மீ வேகத்ை வெறும் 6.4 நொடியில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் அதிகபட்சம் 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்சன், புராகிரஸிவ் ஸ்டியரிங், சிறப்பான ஹேண்டிலிங் மற்றும் ஸ்டெபிளிட்டிக்காக மேம்படுத்தப்பட்ட சேஸிஸ் செட்டப் ஆகிய அம்சங்கள் உள்ளன.

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4709 மிமி நீளம், 1829 மிமீ அலகம், 1457 மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வீல் பேஸ் மட்டும் 2677 மிமீ அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பூட் வசதி மட்டும் 600 லிட்டர் கொள்ளளவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பக்க சீட்டை மடக்கினால் இதன் கொள்ளளவு 1555லிட்டராக மாறிவிடும்.

வெளிப்புறத்தில் இந்த காில் முழு எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இதில் டைனமிக் இண்டிகேட்டர்களும்வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இந்த காரில் 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளது. மும்பா கிரீன், கேன்டி ஒயிட், ரேஸ் ப்ளூ, மேஜிக் பிளாக், வெல்வெட் ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த காரில் லெதர் சீட்கள் உள்ளன. இது சிவப்பு நிற நூல் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சீட்கள் எல்லம் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மென்ட்களுடன் வருகிறது. இதில் மெமரி ஃபங்சன், ஹீட்டிங், மசாஜிங் ஆகிய ஆப்ஷன்கள்உள்ளன. இந்த காரில்ஆம்பியன்ஸ் லைட்டிங் அம்சங்கள் உள்ளது. இந்த காரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதி இருக்கிறது. மேலும் 11 ஸ்பீக்கர்கள் கொண்ட 675 வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 10 ஏர்பேக்குகுள், அடாப்டிவ்க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் லேன் அசிஸ்ட், இன்டலிஜென்ட் பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் மவுண்ட்கள், ஹெட்ஸ்அப் டிஸ்பிளே, உள்ளிட்ட அம்சங்கள்உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா ஆக்டவியா ஆர்எஸ் காருக்கு மார்கெட்டில் செம டிமாண்ட் இருக்கிறது.இந்த காரை பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த காரை மக்கள் பலர் விரும்பியதால் புக்கிங் ஆரம்பித்த 20 நிமிடங்களில் மொத்த ஸ்டாக்கும் காலியாகிவிட்டது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 18, 2025, 19:35 [IST]
English summary
Skoda octavia rs sold out in 20 minutes after india launch
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X