ஜெப்டோவில் காரையும் புக் பண்ணலாம்.. மளிகை சாமானை போல இதையும் 10 நிமிஷத்துல டெலிவரி கொடுப்பாங்களா!!

வீட்டு உபயோகப் பொருட்களை டெலிவரி செய்து வரும் ஜெப்டோ (Zepto) நிறுவனத்துடன் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கை கோர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்யக் கூடிய நிறுவனமாக ஜெப்டோ இருக்கின்றது. இந்த மாதிரியான அதிக வேகத்தில் செயல்படும் நிறுவனத்துடனேயே கார் உற்பத்தி நிறுவனம் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. கார்களை டெலிவரி செய்யும் பொருட்டே இந்த கூட்டணியை அவர்கள் தொடங்கி இருக்கின்றனர்.

ஸ்கோடா (Skoda) நிறுவனமே ஜெப்டோ உடன் கை கோர்த்திருக்கின்றது. தன்னுடைய புதிய வரவமான கைலாக் (Kylaq) கார் மாடலுக்காகவே அது இந்த ஆன்-லைன் டெலிவரி நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. ஸ்கோடா கைலாக் ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

Skoda kylaq to be delivered by zepto

மிகவும் குறைவான விலையில் இந்த காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றனர். ரூ. 7.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே இது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காருக்காகவே ஜெப்டோ உடன் ஸ்கோடா கை கோர்த்துள்ளது. ஜெப்டோ நிறுவனம், வீட்டு உபயோகப் பொருட்களை போலவே இந்த ஸ்கோடா காரையும் அதிக வேகத்தில் டெலிவரி கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

ஆனால், அது என்ன வேகத்தில் கார்களை டெலிவரி செய்யும் என்பது பற்றிய துள்ளியமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், சற்றே அதிக வேகத்தில் ஜெப்டோ கார்களை டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெப்டோ வாயிலாக கைலாக் காரின் டெலிவரி பணிகளை வருகின்ற 8ஆம் தேதி முதலே டெலிவரி செய்ய இருக்கின்றனர்.

இந்தியாவில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக புக்கிங் பணிகள் தொடங்கிய முதல் பத்து நாட்களிலேயே 10 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கைலாக் எஸ்யூவி காருக்கு கிடைத்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இது ஒட்டுமொத்த மார்க்கெட்டிற்கும் ஆச்சரியத்தை வழங்கும் வகையில் அமைந்தது.

விலை குறைவானதாக இருந்தாலும் ஸ்கோடா கைலாக் பல விஷயங்களில் சிறந்த தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. பாதுகாப்பு மற்றும் பிரீமியம் அம்சங்கள் என எல்லாவற்றிலும் சிறந்ததாக அந்த கார் உள்ளது. உதாரணமாக பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்று இருக்கின்றது.

Skoda kylaq in zepto s van

இது மட்டுமல்ல மைலேஜ் தருவதிலும் கைலாக் சூப்பரான காராகக் காட்சியளிக்கின்றது. லிட்டர் ஒன்றிற்கே அது 19.68 கிலோ மீட்டர் வரையில் மைலேஜை தரும் என அராய் சான்றளித்திருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை ஒற்றை மோட்டார் ஆப்ஷனே ஸ்கோடா கைலாக் காரில் வழங்கப்படுகின்றது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் அது ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைக் கருத்தில் கொண்ட தன்னுடைய தயாரிப்பை தரமானதாகவும், குறைவான விலையிலும் ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இது வரும் நாட்களில் விற்பனையில் மாபெரும் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2025, 19:57 [IST]
English summary
Skoda partners with zepto for quick car deliveries
மேலும்... #skoda #Skoda Kylaq #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+