கம்மி விலையில வித்தா யாரு தான் வாங்க மாட்டாங்க? 6 மாசத்துல இவ்வளவு பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

ஸ்கோடா நிறுவனம் கடந்த 6 மாதத்தில் இதுவரை இல்லாாத அளவிற்கு அதிக அளவிலான கார்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. மொத்தம் 134 சதவீதம் அளவிற்கு இந்த வாகனத்தின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஸ்கோடா நிறுவனம் கடந்த ஜனவரி முதல் ஜூன்மாதம் வரையிலான விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்பட அந்நிறுவனம் மொத்தம் 36,194 வாகனங்களை இந்த 6 மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் நடந்த விற்பனையை ஒப்பிடும் போது தற்போது 134 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

Skoda Sales H1 2025

இதற்கு முன்னர் 6 மாதத்தில் நடந்த விற்பனையில் அதிகபட்சமாக கடந்த 2022ம் ஆண்டு 28,899 கார்களை விற்பனை செய்திருந்தது. அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் கடந்த 6 மாத விற்பனை அதிரகரித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இந்நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் இந்நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் டாப் 7 கார் பிராண்ட் பட்டியலில் முதன் முறையாக இடம் பிடித்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த 130 ஆண்டுகளாக சர்வதேச அளவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனத்தின் தயாரிப்பு அதிக விற்பனையை பெற்றதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்கோடா கைலாக் கார் தான். இந்த கார் தான் ஸ்கோடாவின் முதல் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும்.

Skoda Sales H1 2025

இதன் விலை குறைவாக இருப்பதால் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களிலும் இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு நவம்பவர் மாதம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த கார் கிட்டத்தட்ட முழுமையாக இந்தியாவிலேயே தயாராகிறது என சொல்லலாம். அந்நிறுவனத்தின் MQB A0 IN என்ற பிளாட்ஃபார்மில் தான் உருவாக்கப்பட்டது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தனது கோடியாக் என்ற எஸ்யூவி காரின் 2ம் தலைமுறை காரையும் அறிமுகப்படுத்தியது. இந்த கார் ஸ்போர்ட் லைன் மற்றும் L&K என்ற 2 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 46.89 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொரத்தப்பட்டுள்ளது. இது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைந்து 201 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

Skoda Sales H1 2025

மேலும் ஸ்கோடா ஸ்லாவியா காரின் விற்பனையும் இந்நிறுவனத்திற்கு கை கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் சிறப்பாக விற்பனையாகும் ஆக்டவியா ஆர் எஸ் கார் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளது. ஸ்கோடா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு வரை 120 ஷோரூம்களை தான் வைத்திருந்தது. தற்போது இது 295 ஆக உயர்ந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 350 ஆக தங்கள் நெட்வோர்க்கை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனம் தங்களது காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்க 1 ஆண்டிற்கான பராமரிப்பு பேக்கேஜையும் வழங்குகிறது. இதனால் இந்த நிறுவன கார்களை வாங்குபவர்கள் 30 ஆயிரம் கி.மீ அல்லது 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் முதல் சர்வீஸிற்கு காரை விடுகின்றனர். இது போக நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் சர்வீஸ் திட்டங்களையும் வடிக்கையாளர்களுக்கு வழங்குகிது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனம் தற்போது ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் கார்களை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த தொழிற்நுட்பத்தில் கார்கள் வந்தால் நிச்சயம் நல்ல மைலேஜ் கொண்ட கார்களை அந்நிறுவனம் தயாரிக்கும். இதனால் விற்பனை பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 4, 2025, 8:59 [IST]
English summary
Skoda sales h1 2025 highest ever half yearly record in india
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X