90 நாளில் 17,161 பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க! விலை இவ்வளவு கம்மியா?
இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் கடந்த காலாண்டு விற்பனை என்பது அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 17,161 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக பதிவு செய்துள்ளது. இது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியாக அமைந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாத விற்பனை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் மொத்தம் 17,161 வாகனங்களை கடந்த மூன்று மாதங்களில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 6,636 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த விற்பனையை ஒப்பிடும் போது 101 சதவீதம் அதிகமாகும்.

இவ்வளவு அதிகமான விற்பனையை பெறுவதற்கு இந்நிறுவனத்தின் கைலாக் கார் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த கார் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இது போக குஷாக், ஸ்லாவியா, கோடியாக் ஆகிய கார்களின் விற்பனையும் இந்த அதிக விற்பனைக்கு சப்போர்ட் செய்து உள்ளது. இதில் கைலாக் கார் ஸ்கோடா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் காம்பேக்ட் எஸ்யூவி காராக கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் அறிமுகமானது.
இதுவரை ஸ்கோடா நிறுவனத்தின் கைலாக் காரை 37,000 மேற்பட்டோர் வாங்கியுள்ளார்கள். இதன் மூலம் இந்நிறுவனம் இந்த 2025 ஆம் ஆண்டு முதல் 9 மாதத்தில் மொத்தம் 53,355 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மாதம் நடந்த அதிக விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி மாற்றத்தில் ஏற்பட்ட விலை குறைவு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் 127 நகரங்களில் 315 டீலர்ஷிப்புகள் மூலம் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

ஸ்கோடா நிறுவனம் இந்தியாவிற்கு வந்து 25 ஆண்டுகள் தொடர்வதை முன்னிட்டு இந்நிறுவனம் சிறப்பு ஆனிவர்சரி எடிசனாக தனது கைலாக் மற்றும் குஷாக், ஸ்லாவியா கார்களில் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியது. இதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி வரி குறைப்பில் இந்நிறுவனத்தின் கார்கள் விலை வெகுவாக குறைந்தன
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியாக் கார்களை ஜிஎஸ்டி வரி குறைப்பில் ரூபாய் 3.30 லட்சம் வரை குறைந்தது இதுபோக நிறுவனம் பண்டிகைக்காக தள்ளுபடியாக 2.50 லட்சம் வரை தள்ளுபடிகளையும் வழங்கியது. ஒட்டுமொத்தமாக இந்த காரின் விலை 5.80 லட்சம் வரை குறைந்தது. அடுத்ததாக பொறுத்தவரை ஜிஎஸ்டி வரிகுறிப்பில் ரூபாய் 66 ஆயிரம் வரை குறைந்தது. இது போக பண்டிகை கால தள்ளுபடியாக 2.50 லட்சம் வரை தள்ளுபடிகளை வழங்கியது. இதன் மூலம் மொத்தமாக ரூபாய் 3.16 லட்சம் வரை இந்த காருக்கு தள்ளுபடிகள் கிடைத்தது.

அடுத்ததாக ஸ்கோடா கைலாக் காரை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி குறைப்பில் ரூபாய் 1.19 லட்சம் விலை குறைந்தது. ரூ 63 ஆயிரம் வரை விலை குறைந்தது பண்டிகை காலத்தில் புதிதாக தள்ளுபடிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஸ்லாவியா காருக்கு பண்டிகை கால தள்ளுபடி சேர்த்து ரூபாய் 2.50 லட்சம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகளும் அடங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்திற்கு என்று மிகப்பெரிய அளவில் மதிப்பு இருக்கிறது. தற்போது ஜிஎஸ்டி வரிகுறைப்பால் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் பலர் வாகனங்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். இதன் எதிரொலியாக கடந்த மாதம் இந்நிறுவனம் சிறப்பான விற்பனையை பெற்று அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளது. இதனை தொடர்ந்து அந்நிறுவனம் செய்தால் நிச்சயம் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை நிறுவனம் உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









